twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜியோ ஜிகாபைபர் ஆட்டம் ஆரம்பம் - பீதியில் தயாரிப்பாளர், மால் உரிமையாளர்கள்

    |

    Recommended Video

    ஜியோ ஜிகா ஃபைபர் சேவையை பெறுவது எப்படி? தெரிஞ்சுக்க வேண்டிய விஷயங்கள்

    மும்பை: வருது வருது என்று பயமுறுத்திய ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஜியோ ஜிகா ஃபைபர் திட்டம் செப்டம்பர் 5ஆம் முதல் தொடங்கப்படும் என்ற முகேஷ் அம்பானியின் அறிவிப்புக்கேற்ப நேற்று முதல் தொடங்கிவிட்டது. இத்திட்டத்தில் சேர விரும்புவோர் அவர்களது விவரங்களை கொடுப்பதையும் கூட சில இணய திருடர்கள் வங்கி கணக்கு விவரங்களை திருடி விடுவதாகவும் பல வதந்திகள் அடிபடுகின்றன.

    இந்த ஜியோ ஜிகாஃபைபர் திட்டத்தின் மூலம் இலவச டெலிபோன் சேவை, 4கே டிவி, செட் டாப் பாக்ஸ் மற்றும் ஜியோ இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் என இத்தனை சேவையும் ஒரே திட்டம் மூலம் கிடைக்கிறது.

    Jio Giga fiber scheme launched by Reliance on yesterday

    சமீபத்தில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் 42வது ஆண்டுக் கூட்டத்தில் முகேஷ் அம்பானி அறிவித்தது போல் ஜியோ ஜிகா ஃபைபர் எனும் பிரீமியம் திட்டத்தை வழங்கியுள்ளார் என்ற அறிவிப்பு வந்தவுடனேயே மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியது. சலுகைகள் அதிகமாக கொடுப்பதோடு அதுவும் இதற்கு கட்டணம் 700 ரூபாய் முதல் ஆரம்பமாகிறது என்பதால் இதற்கு வரவேற்பு அதிகம் இருக்கிறது.

    ஆனால் இந்த திட்டம் மூலம் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் பெரும் பீதியில் உள்ளனர். அதற்கு காரணம் ரிலீஸ் ஆகும் புதிய படங்கள் முதல் நாள் முதல் ஷோவாக ஜியோ ஜிகாஃபைபர் மூலம் ஒளிபரப்பாகும். அந்த திட்டத்தில் சேர்ந்துள்ள சந்தாதாரர்கள் தங்களின் வீட்டில் இருந்தபடியே வசதியாக படங்களை பார்த்து ரசிக்க முடியும் என்பது தான்.

    இந்த ஒரே திட்டம் மூலம் டிவி அல்லது மொபைல் போன் ஸ்ட்ரீமிங் (Live Streaming) மூலம் ஜியோ செட்டாப் பாக்ஸின் வாயிலாக படங்களை பார்க்கலாம். இத்துடன் ஜியோ வாய்ஸ் கால் வசதியும் ஒரே இணைப்பின் மூலம் பெறலாம்.

    இருப்பினும் இது சினிமா தயாரிப்பாளர்களை மிகவும் கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்திய முழுவதும் உள்ள முக்கிய நகரங்களான சென்னை, டெல்லி, மும்பை, வதோதரா, ஜெய்ப்பூர், கொல்கத்தா, வாரணாசி, நொய்டா, புவனேஸ்வர், சூரத், ஆக்ரா, விசாகப்பட்டினம், லக்னோ, ஹரித்வார், பாட்னா, போர்ட் பிளேர், பெங்களூர், காசியாபாத் போன்ற இடங்களில் இந்த சேவை கிடைக்கும்.

    பிறகு இந்தியா முழுவதும் இந்த சேவை அறிமுகப்படுத்தப்படும். இந்த திட்டம் வெற்றி நடைபோட ஆரம்பித்துள்ளதை நினைத்து கதி கலங்கியுள்ளனர். இதை எப்படி சமாளிக்க போகிறார்கள் அல்லது எப்படி இதில் இருந்து மீண்டு வரப்போகிறார்கள் என்பதெல்லாம் கேள்விக்குறியாகவே உள்ளது.

    ஏற்கனவே ஏர்டெல், வோடாஃபோன் போன்ற பல தொலைத்தொடர்பு நிறுவனங்களின் மார்க்கெட்டை கலங்க வைத்த ஜியோ சேவை இப்போது புதிய ரூபத்தில் விஸ்வரூபம் எடுத்து வந்துவிட்டது. இது நடைமுறைக்கு வருமாயின் தயாரிப்பாளர்கள் படு நட்ஷத்தில் தள்ளப்படுவார்கள். மால் உரிமையாளர்கள் மற்றும் மல்டி ப்ளக்ஸ் உரிமையாளர்கள் உட்பட அனைவருமே தலையில் துண்டை போட்டுக்கொண்டு ஒரு பெரிய நாமத்தை போட்டுக்கொண்டு போய்விட வேண்டியது தான்.

    ஜியோ ஜிகா ஃபைபர் எனும் பிரீமியம் திட்டத்தில் இணைவதற்கு https://gigafiber.jio.com/registration எனும் வலைத்தளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். அதற்கு முதலில் லொகேஷன் செட் செய்ய வேண்டும். பிறகு வழக்கம் போல் பெயர், முகவரி, செல்போன் நம்பர், மின்னஞ்சல் முகவரி போன்றவற்றை பூர்த்தி செய்து OTP பெற்றுக்கொள்ள வேண்டும்.

    OTPயை வலைத்தளத்தில் கொடுத்து முகவரியை மறுபடியும் உறுதி செய்தால் ஜியோ நிறுவனமே நம்மை தொடர்பு கொண்டு ஜியோ ஜிகாஃபைபர் சேவை பற்றிய விவரங்களை நமக்கு தெரிவித்து ஒரே நாளில் இணைப்பு தரப்படும் என பல விதமான தகவல்கள் பரவி வருகிறது.

    இப்படி திட்டத்தில் சேர விரும்புவோர் அவர்களது விவரங்களை கொடுப்பதையும் கூட சில இணய திருடர்கள் வங்கி கணக்கு விவரங்களை திருடி விடுவதாகவும் பல வதந்திகள் அடிபடுகின்றன. இது போன்ற பிரச்சனைகளில் சிக்காமல் எப்படி ஜியோ ஜிகாஃபைபர் சேவையை பெறுவது என்பது ஒரு சவாலாகவே உள்ளது. இது எந்த அளவிற்கு அசுரத்தனமாக வெளிவரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    Read more about: news cinema
    English summary
    The Jio Gigafiber fiber scheme launched by Reliance Company, which is threatened by the coming of age, has been launched from September 5, according to Mukesh Ambani's announcement.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X