Just In
- 12 hrs ago
கண்களால் வசியம் செய்யும் ஜான்வி கபூர்… மஸ்காரா போட்டு மயக்குறியே என வர்ணிக்கும் ரசிகர்கள் !
- 12 hrs ago
உச்சகட்ட கவர்ச்சியில் அட்டகாசம் செய்யும் சஞ்சிதா ஷெட்டி…விதவிதமான போஸால் திணறும் இணையதளம்!
- 14 hrs ago
பொங்கலுக்கு வெளியான தமிழ் படங்களின் ஓர் பார்வை !
- 15 hrs ago
மாஸ்டர் மகேந்திரனின் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’… டிரைலரை வெளியிடும் 2 பிரபலங்கள் !
Don't Miss!
- News
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொத்துக்கொத்தாக மரணம்.. பீதியை கிளப்பும் கொரோனா
- Automobiles
முகேஷ் அம்பானியின் பாதுகாப்பு பணியில் புதிய கார்கள்... ஒவ்வொன்றின் விலையும் இத்தனை கோடி ரூபாயா?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 19.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் கடன் வாங்கவோ கொடுக்கவோ கூடாது…
- Finance
7வது சம்பள கமிஷன்: அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4% உயர்த்த மோடி அரசு முடிவு..!
- Sports
சென்னையின் எப்சி -ஈஸ்ட் பெங்கால் அணிகள் பலப்பரிட்சை... வெற்றி யாருக்கு.. காத்திருக்கும் பரபர ஆட்டம்
- Education
ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மீண்டும் ஒரு பிக் பாஸ் டீம் ரீயூனியன்.. வேல்முருகனும் ஜித்தன் ரமேஷும்.. பார்க்கவே சூப்பரா இருக்கு!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் போட்டியாளர்கள் வெளியே சந்தித்துக் கொள்ளும் தருணங்கள் மிகவும் அழகானவை.
இந்த சீசன் பிக் பாஸ் போட்டியாளர்களான ரேகா, சுரேஷ் சக்கரவர்த்தி, வேல்முருகன், சம்யுக்தா சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலானது.
அதன் பிறகு அன்பு கேங்கை சேர்ந்த அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷின் சமீபத்திய ரீயூனியன் புகைப்படமும் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், மீண்டும் ஒரு ரீ யூனியன் நடந்துள்ளது.
சிறுவயது நினைவை பகிர்ந்த இசையமைப்பாளர்..அரிய புகைப்படம் இதோ !

பாடகர் வேல்முருகன்
நாட்டுப்புற பாடகர் வேல்முருகன் பிக் பாஸ் வீட்டில் இருந்த வரை நகைச்சுவைக்கு பஞ்சமே இல்லாமல் இருந்தது. அதே போல அதிகமாக ஆஜீத்துக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு அவர் பாடல்களை பாடி வந்தார். அவர் பாடிய சில அம்மா பாடல்கள் மற்ற ஹவுஸ்மேட்களை கண்ணீர் கடலில் மூழ்க வைத்ததை யாரும் மறக்க மாட்டார்கள்.

கூல் போட்டியாளர்
இதுவரை எந்த ஒரு பிக் பாஸ் சீசனில் இப்படியொரு கூலான போட்டியாளரை யாருமே பார்த்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு இந்த சீசனில் கூல் போட்டியாளராக ஜித்தன் ரமேஷ் இருந்தார். எப்படியாப்பட்ட பிரச்சனைகள் வீட்டுக்குள் நடந்தாலும், அதை பார்த்து அவர் கொடுக்கும் சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்கள் வேற லெவல்.

முதல் ரீயூனியன்
பிக் பாஸ் தமிழ் சீசனில் நேரடி போட்டியாளர்களாக கலந்து கொண்டு சீக்கிரமே எவிக்ட் ஆன ரேகா, சுரேஷ் சக்கரவர்த்தி, வேல்முருகன் மற்றும் சம்யுக்தா ஆகிய நால்வரும் சென்னையில் ஒரு இடத்தில் ஒன்று கூடி சந்தித்து தங்களது அன்பை வெளியேவும் தொடரும் அழகான ரீயூனியன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

அன்பு கேங்
அதே போல பிக் பாஸ் வீட்டில் அப்படி ஒற்றுமையாக இருந்த அர்ச்சனா, நிஷா, ஜித்தன் ரமேஷ் ஆகிய மூவரும், வெளியே வந்தும் தங்களது அன்பை தொடரும் விதமாக ஒன்றாக எடுத்துக் கொண்ட போட்டோவை வெளியிட்டு வைரலாக்கினர். பிக் பாஸ் நிகழ்ச்சி முடிய இன்னும் மூன்று வாரங்களே உள்ள நிலையில் இன்னொரு மிகப்பெரிய அன்பு கூட்டணி ரீயூனியன் இருக்கும் என்பது கன்ஃபார்ம்.

ஜித்தனும் முருகனும்
இந்நிலையில், தற்போது ஜித்தன் ரமேஷும் பாடகர் வேல்முருகனும் ஒன்றாக சந்தித்துக் கொண்டுள்ளனர். அப்போது அவர்கள் இருவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இருவரையும் பிக் பாஸ் வீட்டில் ரொம்பவே மிஸ் செய்வதாக ரசிகர்கள் கமெண்ட் பண்ணி வருகின்றனர்.

யாருடனும் சேரவில்லையா?
இதுவரை வெளியான போட்டியாளர்களிலேயே சனம் ஷெட்டி மற்றும் சுசித்ரா யாருடனும் சேர்ந்து ரீயூனியன் செலிபிரேட் செய்தது போல தெரியவில்லை. வேறு யாராவது அவர்களது நட்பு வட்டத்தினர் வெளியேறினால் அவர்களை சந்திப்பார்கள் என்று தெரிகிறது. சனம் ஷெட்டி தனது ரசிகர்களை குஷிப்படுத்த தனியாக ஏகப்பட்ட போட்டோக்களை பதிவேற்றி வருவது குறிப்பிடத்தக்கது.