»   »  ரசிகர்களுக்காக நேரம் காலம் பார்க்காத விஜய்... - இயக்குநர் ஜான் மகேந்திரன்

ரசிகர்களுக்காக நேரம் காலம் பார்க்காத விஜய்... - இயக்குநர் ஜான் மகேந்திரன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிறந்த நாள் வாழ்த்துகள் விஜய்.

சச்சின் படப்பிடிப்பின் கடைசி நாள்... கோயம்பத்தூர் விமான நிலையத்தில் அன்றைய படப்பிடிப்பு.

விஜய் இருப்பது தெரிந்து விமான நிலையம் வெளியே கல்லூரி மாணவிகளின் பெருங்கூட்டம். விஜய் கண்ணில் தென்ப்படும்போதெல்லாம் விஜய் என்று கத்தி மாணவிகள் ஆரவாரம்.

John Mahendran hails Vijay for his care on fans

அன்றைய படப்பிடிப்பு முடிந்து, அன்று இரவு இருவரும் வெகு நேரம் பேசி கொண்டிருந்தோம். அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு சென்னைக்கு விமானம். காலை நான்கு மணிக்கு எழ வேண்டும். நாங்கள் படுக்கும் போது சுமார் ஒன்னரை மணி இருக்கும்.

படுத்த சில நிமிடங்களில் அறையின் காலிங் பெல் அடிக்கும் சத்தம். திறந்தால், ஹோட்டல் மேனேஜர்.

எழுப்பியதற்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, விஜயின் தீவிர ரசிகை ஒருவர் அவரை காண வந்திருப்பதாக கூற, இந்த நேரத்தில் எப்படி பார்க்க முடியும் என்று நான் கூற, அந்த ரசிகை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொண்டிருப்பதாகவும், ஷூட்டிங்கில் விஜயை பார்த்தாக தோழி சொன்னதை கேட்டு வந்ததாகவும் கூற...

என்னவாக இருந்தாலும் இந்த நேரத்தில் எப்படி பார்க்க முடியும் என்று கூறியபடி நான் ரேஷப்ஷனுக்கு வர,அங்கு அந்த பெண், கையில் ட்ரிப்ஸ் ஏறும் சிரின்ஜ் கையில் சொருகப்பட்ட நிலையில், அவள் தோழி சலைன் பாட்டிலை கையில் பிடித்தபடி நிற்பதை கண்டு ஷாக்.

தயங்கியபடி விஜய்யின், அறை காலிங் பெல்லை அடிக்க, திறந்த விஜயிடம் விஷயத்தை கூற, சற்றும் யோசிக்காமல் வெளியே வந்து, அந்த பெண்ணுடன் புகைப்படம் எடுத்து கொண்டு, அவர் நலம் விசாரித்து, அவரை பத்திரமாய் வழியனுப்பியும் வைத்தார்.

தன் மேல் அன்பு வைத்திருக்கும் ரசிகர்களுக்கு விஜய் நேரம் காலம் பார்ப்பதில்லை. இந்த பண்பு அவரை மேலும் பல உயரங்களுக்கு அழைத்து செல்லும்.

(விஜய்யை பற்றி சச்சின் இயக்குனர் ஜான் மகேந்திரனின் முகநூலில் இருந்து...)

English summary
John Mahendiran, Director of Vijay's Sachin shared his unforgettable experience with Vijay on his birthday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil