twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஸ்வரூபம்: ஹைகோர்ட்டில் இன்று தீர்ப்பு- அரசுடன் சமரசம் பேச கமலுக்கு அட்வைஸ்

    By Chakra
    |

    Kamal
    சென்னை: விஸ்வரூபம் படம் மீதான தடை நீங்குமா நீங்காதா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வரும் நிலையில், தீர்ப்பை இன்றைக்கு (செவ்வாய்க்கிழமை) ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். மேலும் சட்டம் ஒழுங்கைக் கருத்தில் கொண்டும், தேச ஒற்றுமை கருதியும், பெரும் பொருட் செலவில் படத்தைத் தயாரித்துள்ளதால் நஷ்டப்பட்டு விடக் கூடாது என்பதாலும், பிரச்சினை குறித்து அரசுடன் பேசுமாறும் நடிகர் கமல்ஹாசனுக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.

    விஸ்வரூபம் படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து தமிழக அரசு இப்படத்தை 2 வாரங்களுக்குத் திரையிட தடை விதித்து விட்டது. புதுவையிலும் தடை செய்யப்பட்டது.

    இந்தத் தடையை எதிர்த்து நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர்நீதி்மன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வெங்கட்ராமன் ஜனவரி 26ம் தேதி படத்தைப் பார்ப்பதாகவும், 28ம் தேதி வரை படத்திற்குத் தடை நீடிக்கும் என்றும் அறிவித்தார்.

    சர்ச்சைக்குரியவிஸ்வரூபம் படத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வெங்கடராமன் உள்ளிட்ட 50 பேர் பிரசாத் லேபில் பார்வையிட்டனர். இதுதொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இன்றே தீர்ப்பளிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இருப்பினும் தீர்ப்பை நாளை வரை ஒத்திவைத்து நீதிபதி வெங்கட்ராமன் அறிவித்தார்.

    நீதிபதி தனது உத்தரவின்போது கமல்ஹாசன் தரப்பு வக்கீல்களைப் பார்த்துக் கூறுகையில், நாட்டின் ஒற்றுமையைக் கருத்தில் கொள்ள வேண்டும். கமல் ஹாசன் சுமுக முடிவுக்கு பேச்சுவார்த்தை மூலம் மேற்கொள்ள முன்வர வேண்டும். அரசுத் தரப்புடன் சுமுகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறி தீர்ப்பை நாளைக்கு (இன்றைக்கு) ஒத்திவைத்தார்.

    இதையடுத்து அரசுத் தரப்பு அதிகாரிகளை கமல்ஹாசன் தனது வக்கீல்கள் புடைசூழ சந்தித்துப் பேச்சு நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    English summary
    The Madras High Court will deliver the judgement in the case of Viswaroopam ban today
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X