»   »  'தில்வாலே' படம் பற்றி யாரும் நல்லபடியா சொல்லலை: ஷாருக்கானின் தோழி ஜூஹி சாவ்லா

'தில்வாலே' படம் பற்றி யாரும் நல்லபடியா சொல்லலை: ஷாருக்கானின் தோழி ஜூஹி சாவ்லா

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நண்பன் ஷாருக்கானின் தில்வாலே படம் பற்றி யாரும் நல்லவிதமாக கூறாததால் படத்தை பார்க்கும் எண்ணம் இல்லை என பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஷாருக்கான், கஜோல் உள்ளிட்டோர் நடித்துள்ள தில்வாலே படம் வெளியாகி கோடிக் கணக்கில் வசூல் செய்து கொண்டிருக்கிறது. தியேட்டர்களில் என்னவோ கூட்டம் அலை மோதுகிறது. ஆனால் படம் பற்றி யாரும் நல்லவிதமாக விமர்சனம் செய்யவில்லை. தில்வாலே படத்தை பார்த்தால் மர்டாலே(இறப்பு) என்று தான் விமர்சனம் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் படம் பற்றி ஷாருக்கின் நெருங்கிய தோழியும், நடிகையுமான ஜூஹி சாவ்லா கூறுகையில்,

ஷாருக்கான்

ஷாருக்கான்

ஷாருக்கானுக்கு ஜோடியாக அடுத்து நான் எப்பொழுது நடிப்பேன் என்று பத்திரிக்கையாளர்கள் என்னை கேட்பதைவிட அடுத்த முறை அவரை சந்திக்கும்போது அவரிடமே கேளுங்கள்.

படம்

படம்

சரியான கதையும், இயக்குனரும் கிடைத்தால் இந்த ஆண்டே நானும், ஷாருக்கும் சேர்ந்து நடிப்போம். அவருடன் சேர்ந்து நடிக்க ஆசையாக காத்துக் கொண்டிருக்கிறேன்.

தில்வாலே

தில்வாலே

தில்வாலே படம் பற்றி யாரும் நல்லவிதமாக கூறவில்லை. அதனால் படத்தை பார்க்க வேண்டாம் என்று முடிவு செய்துள்ளேன். நான் படத்தை பார்க்காவிட்டால் ஒன்றும் இல்லை.

ஆமீர் கான்

ஆமீர் கான்

ஆமீர் கானும், ஷாருக்கானும் தான் எனக்கு பிடித்த சக நடிகர்கள். நான் என் சினிமா வாழ்க்கையில் அவர்களுடன் தான் பயணம் செய்தேன். மீண்டும் ஆமீர் கானுடன் சேர்ந்து நடிக்க விரும்புகிறேன் என்றார் ஜூஹி.

English summary
Actress cum Shah Rukh Khan's close friend Juhi Chawla has decided to skip watching Dilwale as she hasn't heard many good things about the fim.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil