»   »  வயசுக்கு மீறிய வேலை பார்த்த பிரபல நடிகையின் மகள்

வயசுக்கு மீறிய வேலை பார்த்த பிரபல நடிகையின் மகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil
சுஹியின் செயலை பார்த்து தடுமாறிய ப்ரீத்தி ஜிந்தா

மும்பை: பிரபல பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லாவின் மகள் செய்த வயதுக்கு மீறிய வேலை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

2018ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் வீரர்களை தேர்வு செய்ய கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் ஏலம் நடைபெற்றது.

அந்த ஏலத்தில் பள்ளி மாணவி ஒருவரும் கலந்து கொண்டார்.

ஜூஹி

ஜூஹி

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு வீரர்களை ஏலத்தில் எடுக்க பாலிவுட் நடிகை ஜூஹி சாவ்லா தனது கணவர் மற்றும் 17 வயது மகள் ஜானவி மேத்தாவுடன் வந்திருந்தார்.

பள்ளி மாணவி

பள்ளி மாணவி

வீரர்களை ஏலத்தில் எடுக்கும் முடிவு எடுக்கும் அணியில் பள்ளி மாணவியான ஜானவியும் இருந்தார். வீரர்களை ஏலத்தில் எடுக்க வந்தவர்களில் வயதில் மிகவும் சிறியவர் ஜானவி தான்.

ஏலம்

ஏலம்

எந்த வீரரின் பெயரை சொன்னாலும் கையை தூக்கி ஏலத்தில் கேட்டு பிற அணியினரை கடுப்படைய வைத்தார் பஞ்சாப் அணியின் உரிமையாளரான நடிகை ப்ரீத்தி ஜிந்தா.

அறிவாளி

அறிவாளி

பிற அணிகளை கடுப்பாக்கிய ப்ரீத்தியையே ஒரு முடிவு எடுப்பதில் டென்ஷனாக வைத்திருக்கிறார் ஜானவி. இதை பார்த்த ப்ரீத்தியோ ஜானவி இந்த வயதிலேயே மிகவும் அறிவாளியாக இருப்பதாகக் கூறி பாராட்டியுள்ளார்.

அன்பு

அன்பு

தனது மகள் ஜானவியிடம் அன்பாக நடந்து கொண்டதுடன் சமூக வலைதளத்தில் அவரை பாராட்டிய ப்ரீத்திக்கு ஜூஹி நன்றி தெரிவித்துள்ளார். மேலும் நீங்கள் மிகவும் அன்பானவர் என்று தெரிவித்துள்ளார் ஜூஹி.

கவனம்

கவனம்

கேமரா முன்பு அமர்ந்து அல்லபறை செய்த ப்ரீத்தி ஜிந்தாவை மட்டும் அல்ல அமைதியாக இருந்த ஜானவியையும் கவனிக்க தவறவில்லை ரசிகர்கள். யார் இந்த பொண்ணு, நம்ம தமிழ்நாட்டு பொண்ணு மாதிரி இருக்கே என்று ஐபிஎல் ரசிகர்கள் பேசிக் கொண்டனர்.

English summary
The Indian Premier League 2018 saw the auction of national and international players for various different teams and during the bidding, Preity Zinta met Juhi Chawla's daughter Jahnvi Mehta and was bowled over by her beauty and personality.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil