»   »  உலகின் மிக அழகான பெண் இவர் தானுங்க

உலகின் மிக அழகான பெண் இவர் தானுங்க

Posted By:
Subscribe to Oneindia Tamil

லாஸ் ஏஞ்சல்ஸ்: உலகின் மிக அழகான பெண்ணாக ஹாலிவுட் நடிகை ஜுலியா ராபர்ட்ஸை தேர்வு செய்துள்ளது பீபிள் பத்திரிகை.

இந்த ஆண்டின் உலகின் மிக அழகான பெண்ணாக ஹாலிவுட் நடிகை ஜுலியா ராபர்ட்ஸை(49) தேர்வு செய்துள்ளது பீபிள் பத்திரிகை. லைல் லவட்டை பிரிந்த பிறகு ஜூலியா டேன்னி மோடர் என்ற ஒளிப்பதிவாளரை 14 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஹேஸல், பின்னேயஸ்(12) என்ற இரட்டையர்களும், ஹென்றி(9) என்ற மகனும் உள்ளனர்.

Julia Roberts is world's most beautiful woman

உலகின் மிக அழகான பெண்ணாக 5வது முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார் ஜுலியா. 26 ஆண்டுகளில் 5 முறை அவர் உலகின் மிக அழகான பெண்ணாக தேர்வாகியுள்ளார்.

முதன்முதலாக 1991ம் ஆண்டு அவர் உலகின் மிக அழகான பெண்ணாக பீபிள் பத்திரிகையால் தேர்வு செய்யப்பட்டார். இந்த ஆண்டும் தான் உலகின் மிக அழகான பெண்ணாக தேர்வாகியுள்ளது குறித்து அறிந்து ஜூலியா மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

கடந்த ஆண்டு ஹாலிவுட் நடிகை ஜெனிபர் ஆனிஸ்டன் உலகின் மிக அழகான பெண்ணாக தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
People magazine has selected Hollywood actress Julia Roberts as the world's most beautiful woman of 2017 for the record 5th time.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil