twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோவிட் -19 தடுப்பூசியை போட்ட நடிகர் நகுல்... மற்றவர்களையும் போட அறிவுறுத்தல்

    |

    சென்னை : கோவிட் -19 தடுப்பூசி நாடெங்கிலும் மிகவும் அதிமான அளவில் போடப்பட்டு வருகிறது.

    திரைத்துறையினரும் தங்களது டோசை போட்டு மற்றவர்களை போட அறிவுறுத்தி வருகின்றனர்.

    கொழுக்கு மொழுக்குனு குண்டு குலாப் ஜாமுன்… காஜல் அகர்வாலை வர்ணிக்கும் ரசிகாஸ் !கொழுக்கு மொழுக்குனு குண்டு குலாப் ஜாமுன்… காஜல் அகர்வாலை வர்ணிக்கும் ரசிகாஸ் !

    இந்நிலையில் தற்போது நடிகர் நகுலும் தன்னுடைய கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோசை போட்டுள்ளார்.

    அசாதாரண சூழல்

    அசாதாரண சூழல்

    கொரோனா பரவல் காரணமாக நாடெங்கிலும் அசாதாரணமான சூழல் நிலவி வருகிறது. மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் கோவிட்-19 தடுப்பூசிகளை ஆர்வத்துடன் போட்டு வருகின்றனர்.

    தடுப்பூசி போடும் திரைத்துறையினர்

    தடுப்பூசி போடும் திரைத்துறையினர்

    மேலும் திரைத்துறையினரும் கோவிட் -19 தடுப்பூசிகளை போட்டு வருகின்றனர். தங்களது முதல் டோஸ், இரண்டாவது டோஸ் என்று போட்டு அதை தொடர்ந்து புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர். மேலும் மக்களையும் போட்டுக் கொள்ள அறிவுறுத்தி வருகின்றனர்.

    முதல் டோசை போட்ட நடிகர் நகுல்

    முதல் டோசை போட்ட நடிகர் நகுல்

    இந்நிலையில் தற்போது நடிகர் நகுல் தன்னுடைய கோவிட் -19 தடுப்பூசியின் முதல் டோசை சென்னையில் போட்டுள்ளார். மேலும் தடுப்பூசி போடாதவர்களையும் போட அறிவுறுத்தியுள்ளார். அனைவரும் இணைந்து கோவிட்டை முறியடிப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.

    ஊசி போடும் புகைப்படம்

    ஊசி போடும் புகைப்படம்

    இதுகுறித்து அவர் ஊசி போட்டுக் கொள்ளும் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார். நடிகர் நகுல் தொடர்ந்து ட்விட்டர் பக்கத்தில் பரபரப்புடன் செயல்பட்டு வருகிறார். ட்விட்டர் மூலம் இந்த நெருக்கடியான சூழலில் பலருக்கும் உதவி வருகிறார்.

    English summary
    Actor Nakkhul gets his first dose of COVID-19 Vaccination
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X