»   »  நீதிபதிகளிடம் 'சபாஷ்' பெற்ற வெற்றி மாறனின் விசாரணை!

நீதிபதிகளிடம் 'சபாஷ்' பெற்ற வெற்றி மாறனின் விசாரணை!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: வெற்றிமாறனின் விசாரணை படத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் சமீபத்தில் பார்த்து பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

காவல்துறையின் விசாரணைகளை துல்லியமாக எடுத்துக் கூறிய விசாரணை படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் திரைப் பிரபலங்கள் பலரின் பாராட்டையும் பெற்று வருகிறது.


வெற்றிமாறன்-தனுஷ் கூட்டணியில் வெளியான விசாரணை படத்தை நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் ஏற்கனவே பாராட்டி இருந்தனர்.


Justice P.N.Prakash Appreciates Visaaranai

இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரும், தமிழ்நாடு நீதித்துறை கல்வி கழகத்தின் உறுப்பினர்களில் ஒருவருமான நீதிபதி பிஎன்.பிரகாஷ் நேற்று விசாரணை படத்தைப் பார்த்து தனது பாராட்டுகளை தெரிவித்து இருக்கிறார்.


நீதிபதி பிரகாஷ் மற்றும் பயிற்சி நீதிபதிகள் ஆகியோருக்காக அடையார் இயல்,இசை நாடக வளாக அரங்கில் உள்ள திரையரங்கில் நேற்று விசாரணை சிறப்புக் காட்சி திரையிடப் பட்டது.


படத்தைப் பார்த்த பின்னர் நீதிபதி பிரகாஷ் மற்றும் பயிற்சி நீதிபதிகள் விசாரணையை வெகுவாகப் பாராட்டியுள்ளனர். நீதிபதிகளின் இந்த பாராட்டு இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் குழுவினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்திருக்கிறது.


விசாரணை படத்தைப் பார்த்த சகாயம் ஐஏஎஸ் காவல்துறையின் விசாரணை முறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று கூறிய நிலையில் நீதிபதி பிரகாஷ் படத்தைப் பாராட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
After Sagayam IAS now Justice P.N.Prakash Appreciates Vetri Maran's Visaaranai Movie.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil