Don't Miss!
- Sports
அவர் டென்னிஸ் ஆடிட்டு இருக்காருங்க.. ஹர்திக் பாண்ட்யாவிடம் உள்ள ஸ்பெஷல் ஷாட்.. இர்ஃபான் புகழாரம்
- Automobiles
மஹிந்திரா பொலிரோவை வாங்கும் பிளானில் உள்ளவர்கள் இந்த புதிய ஸ்பெஷல் எடிசனை வாங்கலாம்!! விலையும் குறைவு...
- Finance
SBI வங்கி சேவை 2 நாள் பாதிப்பு.. மக்களே உஷார்..!
- News
குறிச்சு வச்சுக்கோங்க.. 2024 நாடாளுமன்றத் தேர்தல்.. எனது ஆட்டத்தைப் பாருங்கள்.. எச்சரிக்கும் சீமான்!
- Lifestyle
நீங்க நினைத்ததை விட எடையை வேகமாக குறைக்க இந்த பழங்கள் அல்லது காய்கறி சாறுகளில் ஒன்றை தினமும் குடித்தால் போதும்
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
- Technology
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
வழக்கில் தோல்வி.. படத்தில் இருந்து விலகல்.. கலங்கிய ஜானி டெப்.. டிரெண்டாகும் #JusticeForJohnnyDepp
லண்டன்: பிரபல ஹாலிவுட் நடிகர் ஜானி டெப் மற்றும் அவரது மனைவி ஆம்பர் ஹெர்ட் இருவருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்கள் வழக்குகளாக வெடித்தன.
லண்டன் உயர்நீதிமன்றத்தில் ஜானி டெப்புக்கு எதிராக 'சன்' பத்திரிகை தொடர்ந்த 'மனைவியை அடிப்பவர்' (wife beater) என்கிற வழக்கில் ஜானி டெப் பல கட்ட போராட்டங்களுக்கு பிறகு தோல்வியை தழுவினார்.
அதனை தொடர்ந்து வார்னர் பிராஸ் நிறுவனத்தின் அழுத்தம் காரணமாக Fantastic Beast 3ம் பாகத்தில் இருந்து ஜானி டெப் வெளியேறி உள்ளார்.

கணவன் மனைவி சண்டை
நம்ம ஊரில் மட்டுமில்லை, கணவன் மனைவி சண்டை ஹாலிவுட்டிலும் சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் கேப்டன் ஜேக்ஸ்பேரோ கதாபாத்திரத்தில்ந் நடித்து கலக்கிய நடிகர் ஜானி டெப்புக்கும் அவரது மனைவி ஆம்பர் ஹெர்டுக்கும் ஏற்பட்ட குடும்பத் தகராறு கோர்ட்டில் வழக்காக முற்றியது.

அநாகரிகமாக
அதிலும், உங்க வீட்டு சண்டை எங்க வீட்டு சண்டை மாதிரிலாம் இல்லை. வேற லெவல் சண்டையை ஜானி டெப் மற்றும் அவரது காதல் மனைவி ஆம்பர் ஹெர்ட் போட்டனர். ஜானி டெப்பின் விரலை வெட்டினார் என்றும், இவர் சரக்கு பாட்டிலால் மனைவியை அடித்து துன்புறுத்தினார் என்றும், சிறுநீர் கழித்தார் என்றும் ரொம்பவே நாரியது.

வழக்கில் தோல்வி
ஆக்வாமேன் பட ஹீரோயின் ஆம்பர் ஹெர்டுக்கு ஆதரவாகவும் ஜானி டெப்புக்கு எதிராகவும் சன் பத்திரிகை நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் ஜானி டெப் பல கட்ட விசாரணைகளுக்கு பிறகு தோல்வியை தழுவினார். மேலும், லண்டன் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப் போவதாகவும் கூறியுள்ளார்.

கைவிரித்த வார்னர் பிராஸ்
பிரபல ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான வார்னர் பிராஸ், பெண்கள் மீது வன்கொடுமையில் ஈடுபட்ட ஜானி டெப்பை தொடர்ந்து தங்கள் நிறுவனத்தில் பணியாற்ற அனுமதிக்க முடியாது என்கிற காரணத்தினால், Fantastic Beats 3ம் பாகத்தில் இருந்து அவரை வெளியேற பணித்தது. அவரும், அந்த அழுத்தத்தை உணர்ந்து கொண்டு வெளியேறுகிறேன் என அறிவித்துள்ளது ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.

உலகளவில் டிரெண்டிங்
#JusticeForJohnnyDepp என்ற ஹாஷ்டேக்கை மீண்டும் ஜானி டெப் ரசிகர்கள் உலகளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர். Fantastic Beast படத்தின் முதல் மற்றும் இரண்டாவது பாகத்தில் கிரிண்டல்வால்ட் கதாபாத்திரத்தில் மிரட்டிய ஜானி டெப், மூன்றாவது பாகத்தில் இருந்து விலகக் கூடாது என்றும் பைரேட்ஸ் ஆஃப் தி கரீபியன் படத்தில் இவரை தவிர வேறு யாரையும் ஜேக்ஸ்பேரோவாக பார்க்க விரும்பவில்லை என்றும் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.

இது என்ன நியாயம்
ஜானி டெப்பை வார்னர் பிராஸ் படங்களில் இருந்து நீக்கியது தொடர்பாக ரசிகர்கள் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், ஆக்வாமேன் இரண்டாம் பாகத்தில் இருந்து ஆம்பர் ஹெர்டையும் நீக்க வேண்டும், ஜானி டெப் அப்பாவி, எல்லாத்துக்கும் காரணம் ஆம்பர் ஹெர்ட் தான் என்கிற குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன.