»   »  ‘உப்புக் கருவாடு-ன்னா இன்னா?... கடைசி வரைக்கும் சொல்லவே மாட்டேங்குறாங்களே’!

‘உப்புக் கருவாடு-ன்னா இன்னா?... கடைசி வரைக்கும் சொல்லவே மாட்டேங்குறாங்களே’!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ராதா மோகனின் இயக்கத்தில் கருணாகரன், நந்திதா நடித்துள்ள உப்புக் கருவாடு படத்தின் டீசர் இன்று வெளியானது. இதனை நடிகை ஜோதிகா இணையதளம் வாயிலாக வெளியிட்டார்.

அழகிய தீயே, மொழி, அபியும் நானும், பயணம் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் ராதாமோகன். இவர் தற்போது கருணாகரன், நந்திதா நடிப்பில் இயக்கியுள்ள படம் உப்புக் கருவாடு.

இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், சதீஷ், மயில்சாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஸ்டீவ் வாட்ஸ் என்பவர் இசையமைத்துள்ளார்.

ஜோதிகா...

ஜோதிகா...

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில், இன்று டீசர் வெளியாகியுள்ளது. இதனை இன்று காலை ஜோதிகா இணையதளம் வாயிலாக வெளியிட்டார்.

காமெடி படம்?

காமெடி படம்?

உப்புக் கருவாடு காமெடி நிறைந்த படமாக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதன் டீசரும் காமெடியாகவே தொகுக்கப் பட்டுள்ளது.

நம்பிக்கை...

நம்பிக்கை...

வித்தியாசமாக வெளியாகியுள்ள இந்த டீசரைப் போலவே படமும் மக்களைக் கவரும் என படக்குழுவினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

உப்புக் கருவாடுனா என்ன?

உப்புக் கருவாடுனா என்ன?

‘உப்புக் கருவாடுனா என்ன ?' என மயில்சாமி கேட்பது போல தொடங்குகிறது இந்த டீசர். இடையே இது என்ன மாதிரியான படம் என ஆளாளுக்கு மாற்றி மாற்றிப் பேச, கடைசியில், ‘கடைசி வரைக்கும் சொல்லவே மாட்டேங்குறாங்களே' என முடிகிறது.

நம்பிக்கை....

நம்பிக்கை....

உண்மையிலேயே இந்த டீசரைப் பார்க்கும் போது இது என்ன மாதிரிப் படமாக இருக்கும் என யூகிக்க முடியாவிட்டாலும், நிச்சயம் காமெடிக்கு பஞ்சமிருக்காது என மட்டும் நம்பிக்கை வருகிறது.

எதிர்பார்ப்பு...

தனது முந்தையப் படங்களில் காமெடியைக் கலந்து உணர்ச்சிபூர்வமான கதைகளைக் கையாண்ட ராதாமோகன், இப்படத்தில் முழுக்க முழுக்க காமெடி விருந்து வைக்கப் போகிறார் என மக்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

English summary
Actress Jyothika who recently made her comeback with the super hit 36 Vaydhinile has launched the trailer of Radha Mohan’s upcoming film Uppu Karuvadu today.
Please Wait while comments are loading...