twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    போட்டோ ஜர்னலிஸ்ட் டு ஹிட் பட ஸ்பெஷலிஸ்ட்.. கே.வி.ஆனந்த்தின் கலர்ஃபுல் வாழ்க்கை பயணம்!

    |

    சென்னை : ஒளிப்பதிவாளரும், டைரக்டருமான கே.வி.ஆனந்த் இன்று காலை மாரடைப்பால் காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக ஏப்ரல் 24 ம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கே.வி.ஆனந்த், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

    முதல் ஆளாக கேவி ஆனந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த சூர்யா!முதல் ஆளாக கேவி ஆனந்துக்கு அஞ்சலி செலுத்த வந்த சூர்யா!

    பத்திரிக்கை ஃபோட்டோகிராபராக தனது வாழ்க்கையை துவங்கிய கே.வி.ஆனந்த், சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் பி.சி.ஸ்ரீராமிடம் உதவியாளராக சேர்ந்தார். ஸ்ரீராமுடன் இணைந்து இவர் பணியாற்றிய கோபுர வாசலிலே, அமரன், மீரா, தேவர் மகன், திருடா திருடா ஆகிய படங்கள் அனைத்தும் ஹிட் படங்களாக அமைந்தன.

    முதல் படத்திலேயே தேசிய விருது

    முதல் படத்திலேயே தேசிய விருது

    1994 ம் ஆண்டு ஒளிப்பதிவாளராக மோகன்லால் நடித்த தேன்மாவின் கொம்பாத்து படத்தில் பணியாற்றினார். இந்த படத்தில் பணியாற்ற முதலில் டைரக்டர் பிரியதர்ஷன், பி.சி.ஸ்ரீராமிடம் தான் கேட்டுள்ளார். ஆனால் அவர் ஏற்கனவே ஒப்புக் கொண்ட படங்களில் பிஸியாக இருந்ததால் அந்த வாய்ப்பு கே.வி.ஆனந்த்திற்கு கிடைத்தது. இந்த படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதினை கே.வி.ஆனந்த் பெற்றார். முதல் படத்திலேயே தேசிய விருது பெற்றதால் திரையுலகினரின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்தார் கே.வி.ஆனந்த்.

    தமிழில் அனைத்தும் ஹிட்

    தமிழில் அனைத்தும் ஹிட்

    தமிழில் 1996 ம் ஆண்டு காதல் தேசம் படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். இந்த படமும் ஹிட் படமாக அமைந்தது. தொடர்ந்து இவர் பணியாற்றிய நேருக்கு நேர், முதல்வன், விரும்புகிறேன், பாய்ஸ், செல்லமே, சிவாஜி, ஹீரோவா ஜீரோவா ஆகிய படங்களும் சூப்பர்ஹிட் படங்களாக அமைந்தன. இதனைத் தொடர்ந்து டைரக்டராகவும் கே.வி.ஆனந்த் பல படங்களை இயக்கினார். ஏறக்குறைய 10 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிப்பதிவாளராக இருந்தவர் கே.வி.ஆனந்த்.

    பல மொழிகளில் பிரபலம்

    பல மொழிகளில் பிரபலம்

    தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் 14 படங்களில் ஒளிப்பதிவாளராக கே.வி.ஆனந்த் பணியாற்றி உள்ளார். 2005 ம் ஆண்டு கனா கண்டேன் படத்தின் மூலம் டைரக்டராக அவதாரம் எடுத்த கே.வி.ஆனந்த், தற்போது பிஸியாக இருக்கும் பல ஒளிப்பதிவாளர்களை தனது படங்களில் அறிமுகப்படுத்தி உள்ளார்.

    பல ஒளிப்பதிவாளர்களுக்கு வாய்ப்பு

    பல ஒளிப்பதிவாளர்களுக்கு வாய்ப்பு

    கே.வி.ஆனந்த் இயக்கிய பெரும்பாலான படங்களில் ஜெகனுக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார். கதை, இசை என பலவற்றிலும் இணைந்து பணியாற்றி தனது திறமையை வெளிப்படுத்தியவர் கே.வி.ஆனந்த். சிறியதாக, அதே சமயம் மிக வலிமையாக, வித்தியாசமான தலைப்புக்களை தனது படங்களுக்கு வைத்து, அவற்றை ரசிகர்களின் மனங்களிலும் இடம்பிடிக்க செய்வதில் வல்லவர் கே.வி.ஆனந்த்.

    விருது பெற்ற இயக்குனர்

    விருது பெற்ற இயக்குனர்

    கே.வி.ஆனந்த் இயக்கிய அயன், கோ, அனேகன், கவண் ஆகிய படங்கள் பேசப்படும் படங்களாக அமைந்தன. சிறந்த ஒளிப்பதிவாளர் மட்டுமின்றி சிறந்த டைரக்டருக்கான விருதினையும் பலமுறை பெற்றுள்ளார் கே.வி.ஆனந்த். பல துறைகளில் திறமை வாய்ந்த கே.வி.ஆனந்த்தின் திடீர் மரணம் அதிர்ச்சி அளிப்பதாக திரையுலக பிரபலங்கள் பலரும் வேதனை தெரிவித்துள்ளனர்.

    English summary
    KV Anand as a successful career as a cinematographer for over a decade
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X