»   »  ஹாரீஸ் ஜெயராஜை கழட்டி விட்டு... ஹிப்ஹாப் ஆதியுடன் கைகோர்த்த கே.வி.ஆனந்த்?

ஹாரீஸ் ஜெயராஜை கழட்டி விட்டு... ஹிப்ஹாப் ஆதியுடன் கைகோர்த்த கே.வி.ஆனந்த்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ஹாரிஸ் ஜெயராஜிற்குப் பதில், ஹிப்ஹாப் தமிழா ஆதியுடன் இயக்குநர் கே.வி.ஆனந்த் கைகோர்த்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒளிப்பதிவாளராக இருந்து தற்போது இயக்குனராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருப்பவர் கே.வி.ஆனந்த்.

2005 ம் ஆண்டு கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்த கே.வி.ஆனந்த் தன்னுடைய அடுத்த படத்தில், விஜய் சேதுபதியை இயக்கவுள்ளார்.

கனா கண்டேன்

கனா கண்டேன்

ஸ்ரீகாந்த், பிருத்விராஜ், கோபிகா நடிப்பில் வெளியான கனா கண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் கே.வி.
ஆனந்த். இந்தப் படத்திற்கு வித்யாசாகர் இசையமைத்திருந்தார். வசூல் ரீதியாக இப்படம் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

அயன்

அயன்

எனினும் மனம் தளராமல் சூர்யா, தமன்னாவை வைத்து அயன் படத்தை இயக்கினார். கமர்ஷியல் படமாக வெளியான அயன் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. மேலும் சூர்யாவிற்கு திருப்புமுனைப் படமாகவும் அயன் அமைந்தது. ஹாரிஸ் ஜெயராஜ் - கே.வி.ஆனந்த் கூட்டணியில் முதன்முறையாக வெளியான இப்படத்தின் பாடல்கள், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன.

கோ, மாற்றான்

கோ, மாற்றான்

தொடர்ந்து இருவரின் கூட்டணியில் வெளியான கோ, மாற்றான் மற்றும் அனேகன் படத்தின் பாடல்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெறத் தவறவில்லை.

விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி

இந்நிலையில் விஜய் சேதுபதியை வைத்து கே.வி.ஆனந்த் இயக்கும் அடுத்த படத்தில், ஹிப்ஹாப் ஆதி இசையமைக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பதால் தனி ஒருவன் படத்திற்கு இசையமைத்த ஆதியையே, இப்படத்திற்கு ஒப்பந்தம் செய்து விட்டதாக கூறுகின்றனர்.

என்னை அறிந்தால்

என்னை அறிந்தால்

ஏற்கனவே மின்னலே தொடங்கி வாரணம் ஆயிரம் வரை பயணித்த ஹாரிஸ் ஜெயராஜ்- கவுதம் மேனன் கூட்டணி உடைந்தது. ஏ.ஆர்.ரகுமான், இளையராஜா என்று இசையமைப்பாளர்களை மாற்றி வந்த கவுதம் மேனன், என்னை அறிந்தால் படத்தின் மூலமாக ஹாரிஸ் ஜெயராஜுடன் மீண்டும் இணைந்தார்.

கே.வி.ஆனந்த்- ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணி மீண்டும் இணையுமா? பார்க்கலாம்.

English summary
Sources Said Director K.V.Anand Join Hands with Hiphop Tamizha for His Next.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil