»   »  ஹாலிவுட் படத்தை ரீமேக் செய்யும் காக்கா முட்டை இயக்குனர்

ஹாலிவுட் படத்தை ரீமேக் செய்யும் காக்கா முட்டை இயக்குனர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தேசிய விருது பெற்ற காக்கா முட்டை பட இயக்குனர் மணிகண்டன் ஹாலிவுட் படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார்.

காக்கா முட்டை படம் மூலம் இயக்குனர் ஆனவர் மணிகண்டன். அவரின் முதல் படமே அனைவரையும் அவரை திரும்பிப் பார்க்க வைத்தது. காக்கா முட்டைக்கு சிறந்த குழந்தைகள் படத்திற்கான தேசிய விருது கிடைத்தது.

‘Kaaka Muttai’ director Manikandan to remake Hollywood movie

இந்நிலையில் மணிகண்டன் ஹாலிவுட் படம் ஒன்றை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இது குறித்து மணிகண்டன் கூறுகையில்,

ஹாலிவுட் படம் ஒன்றின் ரீமேக் உரிமையை நான் வாங்கியுள்ளது உண்மை. அது குறித்து வேறு எந்த தகவலையும் தற்போதைக்கு தெரிவிக்க இயலாது. அந்த ரீமேக் வேலைகளை அடுத்த ஆண்டு துவங்க திட்டமிட்டுள்ளேன்.

கடைசி விவசாயி படத்தை முடித்துவிட்டு ஹாலிவுட் பட ரீமேக்கை துவங்குவேன். கடைசி விவசாயி படத்தில் 70 வயது முதியவர் தான் ஹீரோ. அந்த கதாபாத்திரத்திற்கு ஏற்ற முதியவரை தேடிக் கொண்டிருக்கிறோம் என்றார்.

English summary
National Award-winning filmmaker M. Manikandan, most popular for helming the critically acclaimed Tamil drama “Kaaka Muttai”, has acquired the remake rights of a Hollywood film which he plans to direct next year.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil