»   »  'காலா'வோட நாய்க்கு கிடைத்த முக்கியத்துவம்!

'காலா'வோட நாய்க்கு கிடைத்த முக்கியத்துவம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஒரு நல்ல விஷயமோ, கெட்ட விஷயமோ... எதுவாக இருந்தாலும், ரஜினியின் பெயரோட தொடர்புபடுத்திவிட்டால், அதற்கு கிடைக்கிற கவனமே தனி.

ரஜினி எனும் காந்தத்தின் விசேஷம் அப்படி.


'காலா' பர்ஸ்ட் லுக்கில் ரஜினி உட்கார்ந்திருந்த 'தார்' மாடல் காரை தங்களுக்குக் கொடுத்தால் அதை மியூசியத்தில் வைத்து மரியாதை செய்வோம் என மஹிந்திரா சேர்மன் வாய் திறந்து கேட்டுவிட்டார். அவர் நினைத்தால் ஆயிரம் கார்கள் வாங்க முடியும். ஆனால் ரஜினி உட்கார்ந்ததால் அந்த கார் ஒரு லெஜன்டாகிவிட்டது என புகழ்திறார் ஆனந்த் மஹிந்திரா.


Kaala dog now becomes a VIP in Dharavi

அடுத்து அதே ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் ரஜினிக்கு பின்னால் ஒரு நாய் இருப்பதை அனைவரும் கவனித்திருப்பீர்கள். படப்பிடிப்பு நடந்த தாராவி பகுதியைச் சேர்ந்ததுதான் அந்த நாய். இப்போது அந்த பகுதியில் ஒரு விஐபி லெவலுக்கு உயர்ந்துவிட்டது அந்த நாய். அந்த நாயுடன் செல்பி, பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள பலர் ஆர்வம் காட்டுகின்றனர்.


'காலாவின் நாயுடன்' என்ற தலைப்பில் அந்தப் படங்களை ஃபேஸ்புக், ட்விட்டரில் பதிவு செய்து வருகின்றனர்


ரஜினியுடன் வரும் அந்த நாய் தொடர்பான காட்சிகள் படமாக்கப்பட்டு முடிக்கப்பட்டுவிட்டன. இப்போது அந்த நாய் அந்த பகுதியின் ஹீரோவாகிவிட்டதை பாலிவுட் பிரபலங்களே அறிந்து ஆச்சரியப்படுகின்றார்களாம்.

English summary
The Dog that appears with Rajinikanth in Kaala first look is the talk of Mumbai now and many people want to take photos with the dog.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil