»   »  தொடங்கியது காலா படப்பிடிப்பு... ஃபெப்சி தொழிலாளர்கள் பணியாற்ற, ரஜினி நடித்தார்!

தொடங்கியது காலா படப்பிடிப்பு... ஃபெப்சி தொழிலாளர்கள் பணியாற்ற, ரஜினி நடித்தார்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

3 நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்குப் பிறகு ஃபெப்சி தொழிலாளர்கள் பணிக்குத் திரும்பினர். நேற்று ஃபெப்சி தொழிலாளர்களுடன் காலா படப்பிடிப்பு தொடங்கியது. ரஜினிகாந்த் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன.

தயாரிப்பாளகர்களுடன் சம்பள பிரச்சினையில் மோதல் ஏற்பட்டதால் ஃபெப்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். கடந்த 1-ந் தேதி முதல் இந்த போராட்டம் நடந்தது. ரஜினிகாந்தும், பிற முக்கியஸ்தர்களும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும்படி இரு தரப்பினரையும் வற்புறுத்தியதால் பெப்சி தொழிலாளர்கள் நேற்று வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றனர்.


காலா

காலா

இதைத்தொடர்ந்து நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த சினிமா படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கின. 3 நாட்களாக ரத்து செய்யப்பட்டு இருந்த காலா படப்பிடிப்பும் நேற்று தொடங்கியது. சென்னை பூந்தமல்லி அருகே உள்ள படப்பிடிப்பு தளத்தில் மும்பையில் உள்ள தாராவி பகுதியை அரங்குகளாக அமைத்து காலா படப்பிடிப்பை நடத்தினர்.


ரஜினி நடித்தார்

ரஜினி நடித்தார்

‘லைட்மேன்' முதல் ஒளிப்பதிவாளர்கள் வரை அனைத்து பெப்சி தொழிலாளர்களும் படப்பிடிப்புக்கு வந்து பணிகளை தொடங்கினார்கள். நடிகர் ரஜினிகாந்தும் ‘மேக்கப்' போட்டுக் கொண்டு படப்பிடிப்பு தளத்துக்கு வந்து இருந்தார். ரஜினிகாந்த் நடித்த காட்சிகளை இயக்குனர் பா.ரஞ்சித் படமாக்கினார்.


ஃபெப்சி தொழிலாளர் மட்டுமே

ஃபெப்சி தொழிலாளர் மட்டுமே

தயாரிப்பாளர்கள் விரும்பினால் பெப்சி தொழிலாளர்கள் தவிர வேறு தொழிலாளர்களையும் படப்பிடிப்புகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. ஆனால் காலா படப்பிடிப்பில் ஃபெப்சி தொழிலாளர்கள் மட்டுமே வேலை செய்தார்கள். வெளியாட்கள் அழைக்கப்படவில்லை.


விஷால் படத்திலும்

விஷால் படத்திலும்

விஷால் நடிக்கும் துப்பறிவாளன் படப்பிடிப்பை 3 நாட்களாக வெளியாட்களை வைத்து நடத்தினார்கள். நேற்று பெப்சி தொழிலாளர்கள் பணிக்கு வந்தனர். அவர்களையும் வேலைக்கு பயன்படுத்திக்கொண்டனர். இதுபோல் சென்னையிலும், புறநகர் பகுதிகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 40-க்கும் மேற்பட்ட படங்களின் படப்பிடிப்புகள் நேற்று மீண்டும் தொடங்கின. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெப்சி தொழிலாளர்கள் படப்பிடிப்புகளில் பங்கேற்றார்கள்.


English summary
Kaala shooting was resumed with Fefsi workers and Rajinikanth participated in the shoot.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil