அடுத்தடுத்த அப்டேட்டுடன் ரிலீசுக்கு தயாராகும் காத்து வாக்குல ரெண்டு காதல்... ரசிகர்களும் வெயிட்டிங்!
சென்னை : நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகி வரும் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை படக்குழு வெளியிட்டு படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்து வருகிறது.

காத்து வாக்குல ரெண்டு காதல் படம்
நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு நடிகர் விஜய் சேதுபதி இரண்டாவது முறையாக நயன்தாரா மற்றும் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கூட்டணி அமைத்துள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்தப் படத்தில் நயன்தாராவும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை மேலும் கூட்டியுள்ளது.

அனிருத் இசையில் சூப்பர் பாடல்கள்
இதுவரை படத்தின் 4 பாடல்கள் வெளியாகியுள்ளன. அனிருத் இசையில் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு வகையில் அமைந்துள்ளது. மெலடியும் உள்ளது குத்துப்பாடலும் காணப்படுகிறது. ரசிகர்களுக்கு ஒவ்வொரு வகையிலும் சிறப்பான அனுபவத்தை இந்தப் பாடல்கள் கொடுத்து வருகின்றன.

சிறப்பான வரவேற்பு
யூடியூபில் ஏராளமான வியூஸ்களையும் லைக்ஸ்களையும் இந்தப் பாடல்கள் குவித்து வருகின்றன. விக்னேஷ் சிவன் தனது முந்தைய படங்களின் மூலம் ரசிகர்களை சிறப்பான வகையில் ஈர்த்துள்ள நிலையில், இந்தப் படமும் அந்த வகையில் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வித்தியாசமான கதைக்களம்
அதற்கு ஏற்றாற்போல படத்தின் ப்ரமோக்கள், ட்ரெயிலர் உள்ளிட்டவையும் சிறப்பாக அமைந்துள்ளது. ஒரு ஆண் இரண்டு பெண்களை ஒரே நேரத்தில் நேசிப்பதால் ஏற்படும் விளைவுகளை இந்தப் படம் கதைக்களமாக கொண்டுள்ளதாக தெரிகிறது. படத்தின் ட்ரெயிலர் மிகவும் சிறப்பாக காணப்படுகிறது.

ஏப்ரல் 28ல் ரிலீஸ்
இந்தப் படம் வரும் 28ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ள நிலையில் படத்தின் முதல் நாள் முதல் ஷோ அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. டிக்கெட் புக்கிங்கிலும் இந்தப் படம் சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது. அதற்கேற்ப படத்தின் பிரமோஷன்களும் சிறப்பாக செய்யப்பட்டு வருகின்றன.

2 மணி 39 நிமிடங்கள் ரன் டைம்
படத்தின் சென்சாரும் முடிக்கப்பட்டு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதனிடையே படத்தின் மற்றொரு அப்டேட்டையும் படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் ரன் டைம் 2 மணிநேரம் மற்றும் 39 நிமிடங்கள் என்ற தகவலையும் தெரிவித்துள்ளது. இதனால் படம் ஷார்ப்பாகவும் சிறப்பாகவும் அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











