»   »  ஒரே நாளில் ரூ 104 கோடி வசூல் சாதனை... தனி வரலாறு படைத்தது கபாலி!!

ஒரே நாளில் ரூ 104 கோடி வசூல் சாதனை... தனி வரலாறு படைத்தது கபாலி!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படம் ஒரே நாளில் உலகம் முழுவதும் ரூ 104 கோடிகளைக் குவித்து புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது. இனி இப்படியொரு சாதனையை நிகழ்த்த வேறு இந்தியப் படத்தால் முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பிரிமியர் காட்சி

ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் நேற்று உலகெங்கும் வெளியானது. இதுவரை உலக சினிமா பார்த்திராத ஆர்ப்பாட்டமான ஓபனிங்குடன் வெளியான கபாலி, பிரிமியர் காட்சிகள் மூலம் மட்டுமே ரூ 25 கோடி வரை குவித்துவிட்டது.

தமிழகத்தில்

தமிழகத்தில்

இப்போது முதல் நாள் காட்சிகள் மூலம் வசூலான தொகை விவரங்கள் கிடைத்துள்ளன.

இந்தப் படம் தமிழகத்தில் மட்டும் ரூ 24.8 கோடியைக் குவித்துள்ளது. இதுவும் இதுவரை எந்தப் படமும் செய்யாத சாதனைதான்.

இந்தியாவில்

இந்தியாவில்

இந்தியாவில் மட்டும் ரூ 58 கோடிகள் வசூலாகியுள்ளது. உலகளவில் நடந்த பிரிமியர் ஷோக்கள் மற்றும் முதல் நாள் காட்சிகள் அனைத்தும் சேர்த்து ரூ 104 கோடிகளை இந்தப் படம் அள்ளியுள்ளது.

200 கோடி?

200 கோடி?

இந்திய திரைப்பட வரலாற்றில் இப்படியொரு வசூலை இதுவரை எந்தப் படம் குவித்ததில்லை. முதல் வார முடிவில் கபாலி வசூல் 200 கோடிகளைத் தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

திரளும் கூட்டம்

திரளும் கூட்டம்

கபாலி படம் குறித்த விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும், அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தியேட்டர்களில் கட்டி ஏறுகிறது மக்கள் கூட்டம். எனவே அடுத்த வாரம் வரை படத்தின் வசூல் அமோகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.

English summary
Rajinikanth's Kabali has broke all the box office records and become the first Indian movie that collected Rs 100 plus cr in the very first day!
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil