»   »  கபாலி படத்தின் கதை இதுதான் ட்விட்டரை அதகளப்படுத்தும் ரஜினி ரசிகர்கள்

கபாலி படத்தின் கதை இதுதான் ட்விட்டரை அதகளப்படுத்தும் ரஜினி ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி - ரஞ்சித் இணையும் புதிய படத்தின் பெயர் நேற்று வெளியானது, வெளியான சில நிமிடங்களிலேயே உலகளவில் ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆனது தலைப்பு.

ரஜினி இந்தப் படத்தில் தாதாவாக நடிக்கிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில், அதனை உறுதிப்படுத்துவது போன்று கபாலி என்று தலைப்பு வைத்திருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார் இயக்குநர் ரஞ்சித்.


பெயர் எப்படி இருந்தால் என்ன ரஜினி நடிக்கிறார் என்று ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டு இருந்த வேளையில் மைசூரைச் சேர்ந்த சிவக்குமார் அந்த தலைப்பு என்னுடையது என்று போர்க்கொடி தூக்க, அப்புறம் என்ன அதையும் கொண்டாட ஆரம்பித்தனர் நெட்டிசன்கள்.


இவ்வளவு களேபரங்களுக்கு மத்தியில் கபாலி படத்தின் கதை இதுதான், பன்ச் டயலாக் இப்படித்தான் இருக்கும் என்று ரசிகர்கள் ஆளாளுக்கு ஒரு கதையை சொல்ல ஆரம்பித்தனர், வழக்கம் போல அவற்றை இங்கே தொகுத்து கொடுத்திருக்கிறோம் படித்து மகிழுங்கள்.


காதலை சேர்த்துவைப்பவர் கபாலி

காதலை சேர்த்து வைக்க ஜாதியை பலி கொடுப்பவர்தான் இந்த கபாலி என்று ஒரு புதுக்கதையை சொல்லியிருக்கிறார் சின்ராஜ்.


பாகுபலி காலி எங்களுக்கு ஜாலி

பாகுபலி சாதனையை காலி செய்ய வந்துவிட்டார் எங்கள் கபாலி ரசிகர்களுக்கு ஜாலி என்று ஜாலியாக பதிவிட்டிருக்கிறார் ரஜினிராமச்சந்திரன்.


ராதிகா ஆப்தே வீடியோ தான் கதை

ராதிகா ஆப்தேவோட வீடியோவ வெளியிடக் காரணமானவங்க யாருன்னு கண்டுபிடிச்சி அவங்களை கொலை பண்றாரு இந்த கபாலி என்று ரஞ்சித்திற்கே கதை சொல்லுகிறார் கபாலி ரகு.


கபால்னு வில்லனைப் பிடிச்சிருவாரு

கபால்னு வில்லனைத் தாவிப் பிடிச்சிடுவாரு அப்போ பிஜிஎம்ல கபாலி கபாலின்னு வரும் என்று படத்தின் தலைப்புக்கு விளக்கம் கொடுத்திருக்கிறார் சுஷிமா சேகர்.


கண்ணா என் பேரு கபாலி

கண்ணா என் பேரு கபாலி என் கூட மோதுனா உன் பொண்டாட்டி தாலி காலி என்று இலவசமாக பன்ச் வழங்கியிருக்கிறார் காவியன்.


புலிதோலை உரித்து

புலியின் தோலை உரித்து ஆடையாக அணிந்த ஈஸ்வரன் - கபாலீஸ்வரன் என்று பெயருக்கு விளக்கம் அளித்திருக்கிறார் ராணா.


அய்யா என்பேரு கபாலீஸ்வரன்

அய்யா என்பேரு கபாலீஸ்வரன் எனக்கு இன்னொரு பேர் இருக்கு கபாலி என்று பாட்ஷா ஸ்டைலில் கூறியிருக்கிறார் கதிர்.


காளிக்கும் கபாலிக்கும் உள்ள வித்தியாசம்

கெட்ட பய சார் காளி ரொம்பக் கெட்ட பய சார் இந்த கபாலி என்று பெயர் வைத்த விதத்தை விளக்கியிருக்கிறார் தில்லை.இதே போன்ற மேலும் பல ட்வீட்டுகளால் நிரம்பி வழிகின்றது கபாலி ஹெஷ்டேக்...


ஒரு பக்கம் கொண்டாட்டம், மறு பக்கம் பிரச்சினை ஆண்டவா.....English summary
Kabali - Twitter Comments.
Please Wait while comments are loading...