»   »  ரஜினியின் கபாலியை விசில் அடித்து பார்க்க பிராக்டிஸ் ... இது பாக்யராஜ் வீட்டு வாரிசுகள்

ரஜினியின் கபாலியை விசில் அடித்து பார்க்க பிராக்டிஸ் ... இது பாக்யராஜ் வீட்டு வாரிசுகள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி படத்தை முதல்நாள் முதல்காட்சி பார்க்க வேண்டும் என்பது அவரது லட்சக்கணக்கான ரசிகர்களுக்கு அதீத ஆசை. அதுவும் ரஜினியின் அறிமுக காட்சியில் தீபாராதனை காட்டியும், ரகளையாய் விசில் அடித்தும் பார்ப்பார்கள். இன்றைக்கும் பல தியேட்டர்களில் இந்த காட்சியைக் காணலாம்.

சென்னையில் மல்ட்டி ப்ளக்ஸ் தியேட்டர்கள் தவிர பெரும்பாலான தியேட்டர்களில் இந்த விசில் சத்தத்தை கேட்கலாம். பஞ்ச் வசனம் பேசும் போது கைத்தட்டல் சத்தமும், விசில் சத்தமும் காதை பிளக்கும்.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள கபாலி படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு கடந்த ஒரு வாரமாகவே விளம்பரங்கள் களை கட்டி வருகின்றன. எல்லோருமே கபாலி காய்ச்சலில் திரிகின்றனர். விஐபி வீட்டு வாரிசுகளும் நெருப்புடா புலம்பல்தான்.

பிரபல இயக்குநரும் நடிகருமான கே.பாக்யராஜ் குடும்பத்தில் அவரது மகனும், மகளும் ரஜினி ரசிகர்கள். இப்போது சாந்தனுவின் மனைவி கீர்த்தியும் இணைந்து விட்டார். கபாலி படத்தை எப்படி ரகளையாய் விசில் அடித்து பார்ப்பது என்று வீட்டில் பிராக்டிஸ் செய்கின்றனர். அதை வீடியோ எடுத்து டுவிட்டரில் அப்லோடு செய்துள்ளார் சாந்தனு பாக்யராஜ்.

3 மணி நேரமா வெயிட்டிங்

கபாலி படத்தை இன்னும் பார்க்கவில்லை. 3 மணி நேரத்திற்கு மேலாக காத்திருக்கிறேன். இன்று பார்த்து விடுவேன். கபாலி காய்ச்சல் எனக்கும் அடிக்கிறது என்று பதிவிட்டுள்ளார் டி.ராஜேந்தர் மகள் இலக்கியா ராஜேந்தர்.

English summary
Kabali fever begins Bhagyaraj family in Whistle Practice Session for Kabali movie.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil