»   »  வாவ்...முதல் முறையாக 'கபாலி' விமானங்கள்... உலகில் எந்த நடிகருக்கும் கிடைக்காத சிறப்பு!

வாவ்...முதல் முறையாக 'கபாலி' விமானங்கள்... உலகில் எந்த நடிகருக்கும் கிடைக்காத சிறப்பு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பிரமிப்பாகத்தான் இருக்கிறது. ஒரு தமிழ்ப் படத்துக்காக உலகெங்கும் ஏற்பட்டுள்ள எதிர்ப்பார்ப்பு, மெகா நிறுவனங்கள் முன் வந்து செய்யும் விளம்பரங்களைப் பார்க்கும்போது, இது நிஜம்தானா என்று கிள்ளிப் பார்த்துக் கொள்ளத் தோன்றுகிறது.

ஆனால் நிஜம்.

ரஜினிகாந்த் நடித்துள்ள கபாலி படம் சர்வதேச அளவில் பேசப்பட்டு வருகிறது. இதுவரை தமிழ்ப் படங்கள் பற்றிக் கேள்விப்படாத நாடுகள் கூட கபாலியை வெளியிடுவதில் ஆர்வம் காட்டுகின்றன.

Kabali flights with Rajini image...First time in the world!

ஹாலிவுட் திரை வல்லுநர்கள் பலரும் கபாலி குறித்துப் பேசுவதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. இப்போது அமெரிக்காவில் இருக்கும் ரஜினியைச் சந்திக்க முன்னணி திரைப்பட நிறுவனங்கள் இரண்டு முயன்று வருவதாகக் கூறப்படுகிறது. இன்னொரு பக்கம் ஜாக்கி சானுடன் அவரை இணைத்து ஒரு படம் உருவாக்கும் முயற்சியும் நடக்கிறது.

இந்த நிலையில் பிரபல சர்வதேச விமான நிறுவனம் கபாலி படத்தின் புரமோஷனில் இதுவரை இல்லாத பிரமாண்டம் காட்ட ஆரம்பித்துள்ளது.

Kabali flights with Rajini image...First time in the world!

கபாலி படத்துக்காக ஏராளமான விமானப் பயணத் திட்டங்கள், பேக்கேஜ்களை அறிவித்துள்ள அந்த நிறுவனம், இப்போது கபாலி விமானங்களை இயக்கி வருகிறது.

விமானத்தின் வெளிப்பாகம் முழுக்க ரஜினியின் உருவத்தை பிரமாண்டமாக வரைந்து, 'சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் கபாலி' என்ற விளம்பரத்துடன் சர்வதேச அளவில் விமானங்களை இயக்குகிறது. முகப்புப் பகுதியில் ரஜினி உச்சரிக்கும் 'மகிழ்ச்சி' என்ற வார்த்தை ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

Kabali flights with Rajini image...First time in the world!

குறிப்பாக சென்னையிலிருந்து மலேசியா மற்றும் மலேசியாவிலிருந்து உலகின் முக்கியப் பகுதிகளுக்குச் செல்லும் தங்கள் விமானங்களின் வெளிப்புறத்தை கபாலி ஸ்பெஷலாக மாற்றியுள்ளது உலகையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

Kabali flights with Rajini image...First time in the world!

இதுவரை உலகில் எந்த ஒரு நடிகர் அல்லது படத்துக்காகவும் இப்படி விமானத்தில் விளம்பரம் செய்யப்பட்டதில்லை. அந்தப் பெருமை முதல் முறையாக ஒரு தமிழ் நடிகருக்கும் தமிழ்ப் படத்துக்கும் கிடைத்திருக்கிறது. ரஜினிகாந்த், கபாலி என்ற பெயருடன் உலகை வலம் வருகின்றன ஏர் ஏசியா விமானங்கள்.

'ரஜினிடா' 'கபாலிடா'... என நெஞ்சு நிமிர்த்துகிறார்கள் தமிழ் சினிமா ரசிகர்கள்!

English summary
For the first time in the history of world cinema, Air Asia is operating international special flights with Rajinikanth's Kabali images. Wow... It's really a pride for Tamil cinema.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil