»   »  கபாலி ரஜினி படமும் கிடையாது, ரஞ்சித் படமும் கிடையாது: சொல்வது கே.எஸ். ரவிக்குமார்

கபாலி ரஜினி படமும் கிடையாது, ரஞ்சித் படமும் கிடையாது: சொல்வது கே.எஸ். ரவிக்குமார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி ரஜினி படமும் இல்லை, ரஞ்சித் படமும் இல்லை அது ஒரு டான் படம் என இயக்குனர் கே. எஸ். ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி படம் ஹிட்டாகியுள்ளது. வசூலில் பல சாதனைகள் புரிந்துள்ளது கபாலி. படத்தை பார்த்தவர்கள் எல்லோரும் ரஜினியின் எதார்த்தமான நடிப்பை பாராட்டியுள்ளனர்.

Kabali is neither a Rajini movie nor Ranjith's: KS Ravikumar

இந்நிலையில் கபாலி படம் பார்த்த இயக்குனர் கே.எஸ். ரவிக்குமார் ரஜினியை சந்தித்துள்ளார். அப்போது அவர் ரஜினியிடம், சார் இது உங்க படமும் இல்லை, ரஞ்சித் படமும் இல்லை இது ஒரு பக்கா டான் கதை என்று கூறியுள்ளார்.

டானாக அருமையாக நடித்திருக்கிறீர்கள் என்று ரவிக்குமார் பாராட்டியதை கேட்ட ரஜினி பதில் எதுவும் பேசாமல் லேசாக சிரித்தாராம். இந்த தகவலை எல்லாம் செய்தியாளர்களிடம் கூறியது ரவிக்குமார் தான்.

கபாலிக்காக ரஜினியை ரவிக்குமார் மட்டுமா பாராட்டினார், எத்தனையோ பேர் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Director KS Ravikumar said that Kabali is neither a Rajini movie nor Ranjith's.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil