»   »  'கபாலி ஒரு பார்வை பாத்தா'.... ச்சும்மா அதிர வைக்கும் மோஷன் போஸ்டர்!

'கபாலி ஒரு பார்வை பாத்தா'.... ச்சும்மா அதிர வைக்கும் மோஷன் போஸ்டர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

கபாலியின் ரஜினியின் முதல் பார்வை ஸ்டில்கள் என இரண்டே இரண்டுதான் வெளியாகின. இணைய உலகமேமிரண்டு விட்டது, கிடைத்த வரவேற்பைப் பார்த்து.

முதல் முறையாக இந்த முதல் பார்வை ஸ்டில் ஒன்றையே பிரமாண்டமான கட் அவுட்டாக வைத்தார்கள் சத்யம்திரையரங்கில்.


Kabali motion poster.. awesome work by a fan

இளைஞர்களும் திரையுலகினரும் 'தலைவா தலைவா' எனக் கொண்டாடித் தீர்த்தார்கள்.


இப்போது அதே முதல் பார்வைை ஸ்டில் ஒன்றை மலேசிய பின்னணியில் வைத்து மோஷன் போஸ்டர் எனும் அசையும் சுவரொட்டி ஒன்றை வடிவமைத்துள்ளார்கள். ரசிகர்களால் உருவாக்கப்பட்டுள்ள இந்த மோஷன் போஸ்டர் பிரமிக்க வைக்கிறது.


மலேசியாவின் உயர்ரக கார்கள், அடுத்து இன்டர்போல் அலுவலகம், தொடர்ந்து வானில் பறக்கும் விமானங்கள்,


ஹெலிகாப்டர்களைக் காட்டுபவர்கள், அவற்றில் ஒன்று ரஜினியைக் குறிவைக்கிறது. அப்படியே மெல்ல, ரஜினி கம்பீரமாக உட்கார்ந்திருக்கும் ஸ்டில்லில், அவர் கால் ஷூவில் தொடங்கி மெல்ல மெல்ல அவரது கூலிங் க்ளாஸைக் காட்டுவார்கள். அவரது கடைக்கண் பார்வையில் ஒரு வண்ண ஹெலிகாப்டர் வெடித்து சுக்குநூறாகச் சிதறும்!


தலைவா லவ் யூ என்று இந்த போஸ்டர் முடியுகிறது!

English summary
The fan made motion poster of Kabali has rocked online from yesterday night.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil