»   »  கபாலி... நெருப்புடா... வெறுப்புடா... கடுப்புடா...: ஒரு ரசிகரின் விமர்சனம்

கபாலி... நெருப்புடா... வெறுப்புடா... கடுப்புடா...: ஒரு ரசிகரின் விமர்சனம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கபாலி படத்தைப் பற்றி நல்ல விதமாகவும்...ஜாலியாகவும்... விமர்சனம் கூறி வரும் நிலையில் 500 ரூபாய், 1000 ரூபாய் கொடுத்த காசுக்கு பிரயோசனம் இல்லாம போச்சே என்று கதறுகின்றனர் சில ரசிகர்கள்.

ரஜினி நடித்த 'கபாலி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆனது. தியேட்டர்களில் அதிகாலை முதலே ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது.
இந்த படத்திற்காக ஒரு மாதமாகவே பிரமோசனில் ஈடுபட்டனர். டீசர் வெளியானது முதல் ரிலீஸ் நாள் வரைக்கும் விளம்பரம் என்ற பெயரில் கதற அடித்தார்கள்.

காரில் ரஜினி படம்... விமானத்தில் ரஜினி படம்... சாக்லேட்டில்... கேக்கில்.... ஏன் வெள்ளிக்காசில் கூட கபாலிதான். தமிழகமே கபாலி காய்ச்சலில் கதறியது. பலத்த எதிர்பார்ப்புக்கு இடையே இன்று படம் ரிலீஸ் ஆனது.

ரஜினி படம்னா... சும்மா அப்டி இருக்கணும்... ஆனால் இது ரஜினி படம் இல்லை ரஞ்சித் படம் என்று சொன்னாலும் படத்திற்கு சிலர் சங்கு ஊதி வருகின்றனர்.

படம் எப்படி இருக்கு?

படம் எப்படி இருக்கு?

ரிலீஸ் ஆகும் படத்தை முதல் ஷோ முதல் காட்சி பார்த்து விட்டு விமர்சனம் செய்யும் பிரசாந்த் படம் மரண மொக்கை என்று கூறியுள்ளார். கண்ட இடங்களில் குருவி சுடுவது போல சுட்டுத் தள்ளுவதாகவும் கூறியுள்ளார். ராதிகா ஆப்தே, தினேஷ், தன்ஷிகா, நாசர் ஆகியோரும் நன்றாக நடித்துள்ளனர். வில்லனைப் பார்த்தால் காமெடியாக இருப்பதாகவும் கூறியுள்ளார் பிரசாந்த். ஆரம்பம் அட்டகாசம்... ஆனால் இடைவேளைக்குப் பிறகு குமுறு குமுறு என்று குமுறி விட்டனர் என்றும் விமர்சனம் செய்துள்ளார். திங்கட்கிழமை வரை மட்டுமே இந்த படம் ஓடும் என்றும் கூறியுள்ளார் பிரசாந்த்.

ரூ. 1000 போச்சே

கபாலி படம் டிக்கெட் என்ன விலை என்றாலும் பரவாயில்லை... முதல்நாள் முதல்காட்சி பார்க்கவேண்டும் என்று ஆசைப்பட்ட ரசிகர் படம் பார்த்து விட்டு திரும்பி வந்த போது கொடுக்கும் ரியாக்சன் இது என்று பதிவிட்டுள்ளார் ஒரு ரசிகர்.

நெருப்புடா...

நெருப்புடா...

நெருப்புடா... என்று ஆரம்பித்த டீசர்... மகிழ்ச்சி என்ற ஒற்றை வார்த்தையை வைத்தே படத்தை ஓட்டி விட்டனர். படம் டீசர் ஓடிய அளவிற்கு கூட ஓடாது போலிருக்கே. கபாலி... காலி என்கிறார் ஒரு பதிவர்.

ஓவர் விளம்பரம் ஆகாதே

ஓவர் விளம்பரம் ஆகாதே

கபாலி... கபாலி என்று காய்ச்சலில் பேசியவர்கள் எல்லோரும் படம் பார்த்து வெளியில் வரும் போது முதல் 15 நிமிடம் நெருப்புடா... ஃபர்ஸ்ட் ஆஃப் வெறுப்புடா... இன்டர்வெல்ல முருக்குடா... செகன்ட் ஆஃப் கடுப்புடா... வெளியில வரும்போது 1000 ரூபா காசு போச்சேன்னு கடுப்புடா... என்று புலம்பி செல்கின்றனர்.

English summary
Rajinikanth’s most anticipated 159th film Kabali has as of now made sensation with the advancements over the globe. Rajinikanth battled for this film for his fans.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil