»   »  கபாலி... ஏவிஎம்மில் பூஜை... ஏர்போர்ட்டில் ஷூட்டிங்! - பரபர அப்டேட்ஸ்!!

கபாலி... ஏவிஎம்மில் பூஜை... ஏர்போர்ட்டில் ஷூட்டிங்! - பரபர அப்டேட்ஸ்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படத்தின் பூஜை மற்றும் ஆரம்ப விழா வரும் செப்டம்பர் 17-ம் தேதி ஏவிஎம் ஸ்டுடியோவில் நடக்கிறது.

பா ரஞ்சித் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் கபாலி படம் முதலில் மலேசியாவில் படமாவதாக இருந்தது. ஆனால் அங்கு தற்போது நிலவும் அரசியல் சூழல் காரணமாக முதலில் சென்னையிலும் பின்னர் மலேசியாவில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்தனர்.


Kabali Pooja at AVM on Sep 17

அதன்படி படத்தின் ஆரம்ப பூஜை ரஜினிக்கு ராசியான ஏவிஎம் ஸ்டுடியோ பிள்ளையார் கோயிலில் வரும் செப்டம்பர் 17-ம் தேதி நடக்கிறது. அங்கேயே க்ளாப் அடிக்கப்பட்டு முதல் காட்சியை படமாக்குகிறார்கள்.


பின்னர் சென்னை விமான நிலையத்தில் படத்தின் சில காட்சிகளை படமாக்குகிறார்கள். ரஜினி மலேசியாவிலிருந்து விமானத்தில் திரும்புவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாக நம்பகமான வட்டாரங்கள் தெரிவித்தன.


பத்து நாட்கள் படப்பிடிப்புக்குப் பின்னர், ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் மலேசியா செல்கின்றனர்.

English summary
Rajinikanth's Kabali movie pooja and shooting would be held at Chennai AVM studios and Airport on September 17th.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil