»   »  ரசிகர்கள் தவறாமல் தரிசிக்கும் 'சாக்லேட்' கபாலி!

ரசிகர்கள் தவறாமல் தரிசிக்கும் 'சாக்லேட்' கபாலி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னையில் தனியார் பேக்கரி ஒன்றில் வடிவமைக்கப்பட்டுள்ள ரஜினிகாந்தின் ஆறடி உயர சிலையைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் குவிகின்றனர்.

கபாலி படத்தில் இப்போது நடித்து வருகிறார் ரஜினி. அந்தப் படத்தில் ரஜினியின் வெள்ளைத் தாடி கெட்டப் ரசிகர்களிடையே பிரபலமானது.


Kabali Rajinikanth statue attracts fans

சென்னை டிடிகே சாலையில் உள்ள ஒரு தனியார் பேக்கரி, ரஜினியின் இந்த கெட்டப்பால் கவரப்பட்டு அதை ஒரு பெரிய சிலையாக சாக்லேட்டில் வடிவமைத்துள்ளது. 600 கிலோ சாக்லேட்டில் 6 அடி உயரத்தில் செய்யப்பட்டுள்ள இந்த சிலையைக் காண, ரசிகர்களும் பார்வையாளர்களும் திரளுகின்றனர். இந்த சிலையுடன் நின்று படமெடுத்துக் கொள்கின்றனர்.


இந்த நிறுவனம் இதற்கு முன் மகாத்மா காந்தி, டாக்டர் அப்துல் கலாம் சிலைகளை சாக்லேட்டில் வடிவமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
A Private bakkery in Chennai has designed Kabali Rajinikanth getup as Chocolate statue in Chennai.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil