»   »  மூன்றே நாளில் ஒரு கோடி... கபாலி டீசர்!

மூன்றே நாளில் ஒரு கோடி... கபாலி டீசர்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

வெளியான மூன்றே நாட்களுக்குள் 1 கோடி பார்வைகளுக்கு மேல் பெற்று சாதனைப் படைத்துள்ளது ரஜினிகாந்தின் கபாலி டீசர்.

இதன் மூலம் சர்வதேச சினிமா விமர்சகர்கள், ஊடகங்கள், ரசிகர்கள் கபாலி என்ற தமிழ்ப் படம் பற்றிப் பேசும் நிலை ஏற்பட்டுள்ளது.


மே 1-ம் தேதி காலை 11 மணிக்கு கபாலி டீசரை வெளியிட்டார் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு. வெளியான சில நிமிடங்களில் ஒரு மில்லியனைத் தாண்டியது.


புதிய சாதனை

புதிய சாதனை

22 மணி நேரத்துக்குள் 5 மில்லியன் பார்வைகளைப் பெற்றது. கபாலி டீசர் வெளியான மூன்றாவது நாள் இன்று. மூன்று நாட்கள் முடிவதற்கு முன்பே 10 மில்லியன் அதாவது 1 கோடி பார்வைகளைத் தாண்டி சாதனைப் படைத்துள்ளது கபாலி.


வேறு எந்த நடிகரின் படமும் செய்யாத சாதனை

வேறு எந்த நடிகரின் படமும் செய்யாத சாதனை

இந்திய சினிமாவில் வேறு எந்த நடிகரின் முன்னோட்டப் படமும் இத்தனை வேகமாக ஒரு கோடி பார்வைகளைப் பெற்றதில்லை. ஷாரூக்கான், சல்மான் கான், ஆமிர்கான் போன்றவர்களின் டீசர்கள், மிக மிகப் பின்தங்கியே உள்ளன.


ஒரு கோடிக்கு மேல்

ஒரு கோடிக்கு மேல்

இப்போது ஒரு கோடியே ஒரு லட்சம் பார்வைகள் மற்றும் 3.11 லட்சம் லைக்குகள் பெற்றுள்ளது கபாலி. இந்தச் சாதனையை அத்தனை சுலபத்தில் முறியடிக்க முடியாது.


சர்வதேச ஊடகங்களில்

சர்வதேச ஊடகங்களில்

கபாலி டீசர் செய்துள்ள இந்த சாதனை சர்வதேச அளவில் பேசப்படுகிறது. சிஎன்என் உள்ளிட்ட பல வெளிநாட்டு ஊடகங்கள் கபாலி தமிழ் டீசரை ஒளிபரப்பு, இது வியக்க வைக்கும் சாதனை என்று செய்தி வெளியிட்டன.


விமர்சகர்கள்

விமர்சகர்கள்

பல வெளிநாட்டு விமர்சகர்கள், ஒரு தமிழ்ப் படம் இத்தனைப் பெரிய வரவேற்பைப் பெற்றிருப்பது வியக்க வைக்கிறது என்று தெரிவித்துள்ளனர். ஆசிய, ஐரோப்பிய சினிமா வரலாற்றில் மூன்று நாட்களில் ஒரு கோடி பார்வைகள் வேறு எந்தப் படத்துக்கும் கிடைத்ததில்லை என்றும், ஜேம்ஸ்பாண்ட் படமான ஸ்பெக்டருக்குக் கூட இவ்வளவு வியூவ்ஸ் மூன்று நாளில் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.


English summary
Rajinikanth's Kabali teaser has set a new record in Asian Cinema with 10 million views and 3.11 lakhs likes.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil