»   »  'கபாலி'யின் சிங்கப்பூர் உரிமையைக் கைப்பற்றிய அருண் பாண்டியன்!

'கபாலி'யின் சிங்கப்பூர் உரிமையைக் கைப்பற்றிய அருண் பாண்டியன்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 'கபாலி' படத்தின் சிங்கப்பூர் வெளியீட்டு உரிமையை நடிகர் அருண்பாண்டியன் கைப்பற்றியிருக்கிறார்.

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகங்கள் கொண்டவர் அருண் பாண்டியன். சினிமா மட்டுமின்றி அரசியலில் இறங்கி அதிலும் வெற்றி கண்டவர்.


Kabali Singapore Rights Sold

இந்நிலையில் உலகம் முழுவதும் ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் 'கபாலி' படத்தின் சிங்கப்பூர் உரிமையை அருண் பாண்டியன் வாங்கியிருக்கிறார்.


ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தன்ஷிகா, தினேஷ், மைம் கோபி உட்பட பலர் நடித்திருக்கும் இப்படத்தை பா.ரஞ்சித் இயக்கியிருக்கிறார்.நேற்று தணிக்கைக்கு சென்ற இப்படம் யூ சான்றிதழைக் கைப்பற்ற, 'கபாலி' ஜூலை 22ல் வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு அறிவித்து விட்டார்.


'கபாலி' வெளியீட்டுத் தேதியை அறிவித்தது முதல் ரசிகர்கள் அதனை ஆரவாரத்துடன் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் 'கபாலி' பற்றிய டேக்குகள் அதிகளவில் ட்ரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.

English summary
Actor Arun Pandian Bagged Kabali Singapore Rights.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil