»   »  30% வரி விலக்குடன் வெளியாகிறது கபாலி.. ஆராவார எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

30% வரி விலக்குடன் வெளியாகிறது கபாலி.. ஆராவார எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தணிக்கையில் யூ சான்றிதழைப் பெற்றதன் மூலம் தமிழக அரசின் 30% வரிவிலக்கு 'கபாலி'க்கு கிடைத்துள்ளது.

ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ், தன்ஷிகா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'கபாலி'.


பா.ரஞ்சித் இயக்கியிருக்கும் இப்படத்தை கலைப்புலி தாணு பிரமாண்டமாகத் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார்.


தணிக்கை

தணிக்கை

படத்தின் தணிக்கை முடிவுகள் தெரிந்தவுடன் தான் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிப்பேன் என்று தாணு முன்னதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று இப்படத்தைப் பார்த்த தணிக்கைக் குழு அதிகாரிகள், எந்தவித கட்டும் கொடுக்காமல் படத்திற்கு 'யூ' சான்றிதழை வழங்கியுள்ளனர். இதன் மூலம் இப்படத்திற்கு தமிழக அரசின் 30% வரிவிலக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.


டீசர்

டீசர்

படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான வரவேற்பைப் பெற்ற நிலையில் இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் தணிக்கை முடிவுகள் தெரிந்த பின்தான் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவிப்பேன் என்று தாணு கறாராகக் கூறிவிட்டார்.


உலகம் முழுவதும்

உலகம் முழுவதும்

தணிக்கை முடிவுகள் வெளியானவுடன் சொன்னபடி கபாலி வெளியீட்டுத் தேதியை அறிவித்து விட்டனர். அதன்படி தமிழ், தெலுங்கு, இந்தி, மலாய், மலையாளம் உள்ளிட்ட ஏராளமான மொழிகளில் உலகம் முழுவதும் இப்படம் வருகின்ற 22ம் தேதி வெளியாகிறது.


விமானம்

விமானம்

ஏர்ஏசியா, கேட்பரி, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் கபாலியின் விளம்பரத் தூதர்களாக செயல்படுகின்றன. முக்கியமாக ஏர்ஏசியா நிறுவனம் கபாலி போஸ்டர்களை தாங்கி வானில் பறந்து வருகிறது.இதனால் இதுவரை இல்லாத அளவுக்கு இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாகக் காணப்படுகிறது.


English summary
After getting clean U, Kabali movie will get 30% tax exemption from the govt of Tamil Nadu.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil