டாப் 25 உலக சினிமா தரவரிசை... 2வது இடத்தில் கடைசி விவசாயி...விக்ரமிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

சென்னை : உலக திரைப்படங்களை தரவரிசைப்படுத்தும் இணையதளமான Letterboxd ல் 2022 ம் ஆண்டு முதல் பாதியில் வெளியான படங்களின் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் சிறந்த படங்களில் டாப் 25 பட்டியலில் கடைசி விவசாயி படம் 2வது இடத்தில் உள்ளது.

Recommended Video

Kadaisi Vivasayi | Manikandan | Yogibabu Vijay Sethupathi படத்தின் பெரிய பலம் | Filmibeat Tamil

2022 ம் ஆண்டு ஜுன் 30 ம் தேதி வரையிலான முதல் 6 மாதங்களில் உலகம் முழுவதும் தியேட்டர், ஓடிடி உள்ளிட்ட தளங்களில் வெளியான படங்களில் சிறந்த படங்கள் தேர்வுனு செய்யப்பட்டுள்ளன. மக்கள் அளித்த ரேட்டிங்கின் அடிப்படையில் இந்த படங்கள் தரவரிசை படுத்தப்பட்டுள்ளன. இந்த தரவரிசை பட்டியலில் இடம்பிடிக்க குறைந்தது 1000 புள்ளிகளாவது ரேட்டிங் பெற்றிருக்க வேண்டும்.

டாக்குமென்ட்ரி, நான் ஃபிக்சிங் உள்ளிட்டவைகளும் இணைத்து டாப் 25 படங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் முதல் இடத்தை Everthing everywhere all at once என்ற சீன மொழி படம் பிடித்துள்ளது. இரண்டாவது இடத்தில் டைரக்டர் மணிகண்டன் இயக்கத்தில் இந்த ஆண்டு துவக்கத்தில் ஓடிடி.,யில் வெளியான கடைசி விவசாயி படம் பிடித்துள்ளது.

மலைகிராமத்தில் வசிக்கும் விவசாயி, விவசாயம் அழிந்து வரும் நிலையில் தனது நிலத்தையும், அதில் உள்ள பயிர்களையும் காப்பாற்ற நினைப்பதை உணர்வு புர்வமாக சொல்லி உள்ள படம் தான் கடைசி விவசாயி. இயற்கை சார்ந்த விவசாயம் என்பதையும் ஆணித்தரமாக சொல்லி இருந்த இந்த படம் பலரிடமும் பாராட்டை பெற்றது.

Kadaisi Vivasayi got 2nd place in Top rated world cinemas

இருந்தாலும் இந்த படத்திற்கு போதிய அங்கீகாரம் கிடைக்கவில்லை எனபலரும் ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் தற்போது சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது அனைவரையும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. கடைசி விவசாயி டீமுக்கு வாழ்த்துக்கள் குவிய துவங்கி உள்ளது.

Everthing everywhere all at once படம் 4.5 ரேட்டிங்கையும், கடைசி விவசாயி படம் 4.3 ரேட்டிங்கையும் பெற்றுள்ளன. டாப் 25 உலக தர வரிசை பட்டியல் படங்களில் ஆர்ஆர்ஆர் 6 வது இடத்தை பிடித்துள்ளது. கமல் நடித்த விக்ரம் படம் 11 வது இடத்தில் உள்ளது. டாப் 25 உலக சினிமா தர வரிசை பட்டியலில் இந்தியா சார்பில் கடைசி விவசாயி, ஆர்ஆர்ஆர், விக்ரம் ஆகிய படங்கள் தான் இடம்பிடித்துள்ளன.

1000 கோடி வசுல் பார்த்த ஆர்ஆர்ஆர், 500 கோடி வசுலை நெருங்கும் விக்ரம் படங்களை பின்னுக்கு தள்ளி லோ பட்ஜெட் படமாக எடுக்கப்பட்ட கடைசி விவசாயி இரண்டாம் இடம்பிடித்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X