»   »  காதலும் கடந்து போகும் படம் காதலர் தினத்திற்கு உறுதி

காதலும் கடந்து போகும் படம் காதலர் தினத்திற்கு உறுதி

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் சேதுபதி நடித்திருக்கும் 'காதலும் கடந்து போகும்' பிப்ரவரி 12ம் தேதி கண்டிப்பாக வெளியாகும் என்று படக்குழு திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறது. காதலர் தினத்தில் எத்தனை படங்கள் ரிலீஸ் ஆனாலும் நாங்களும் களத்தில் குதிப்போம் என்று தெரிவித்துள்ளனர் படக் குழுவினர்.

'சூது கவ்வும்' படத்தைத் தொடர்ந்து மீண்டும் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வந்தார் விஜய் சேதுபதி. மடோனா நாயகியாக நடித்திருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். சி.வி.குமார், அபினேஷ் இளங்கோவன் மற்றும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.


Kadalum Kadanthu Pogum on Feb 12

ஏப்ரல் 2014ல் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலையில் முழுவதுமாக முடிவுற்றது. கடந்த வாரம் டீஸர் வெளியானது. இந்த டீசரைப் பார்த்த 'கவிதாவும் கண்ணதாசனும் காதலிக்க போறாங்க' என்ற படத்தை இயக்கியிருக்கும் விஜய், காதலும் கடந்து போகும் படத்திற்கு கககபோ என்று விளம்பரப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், தனது படத்தின் தலைப்புக்கு குழப்பம் விளைவிக்கும் வகையில் 'காதலும் கடந்து போகும்' விளம்பரப்படுத்தப்படுவதாகவும் தெரிவித்திருக்கிறார்.


ஆகா ஆரம்பிச்சிட்டாங்க பிரச்சினையை என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இப்படம் பிப்ரவரி 12ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ஆனால் பிப்ரவரி 12ம் தேதி 'ஜில் ஜங் ஜக்', 'மிருதன்', 'பெங்களூர் நாட்கள்' ஆகிய படங்கள் வெளிவர இருப்பதால், 'காதலும் கடந்து போகும்' திரைப்படம் பிப்ரவரி 26ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை மறுத்துள்ள காதலும் கடந்து போகும் படக்குழு, திரைப்படத்திற்கு படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பு இருப்பதால், பிப்ரவரி 12 வெளியீட்டில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.

English summary
Kadalum Kadanthu Pogum Movie release on Feb 12 for Valetines day special.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil