இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்படும்...கன்ஃபார்ம் செய்த எஸ்.ஜே.சூர்யா
சென்னை : டாப் டைரக்டராக இருந்து, தற்போது டாப் வில்லன் நடிகராக மாறி உள்ளார் எஸ்.ஜே.சூர்யா. பல டாப் ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து வரும் எஸ்.ஜே.சூர்யா, ஹீரோவாகவும் சில படஙகளில் நடித்து வருகிறார்.

2016 ம் ஆண்டு சுந்தர்.சி நடித்த முத்தின கத்திரிக்காய் படத்தை இயக்கிய வெங்கட் ராகவன், தற்போது கடமையை செய் என்ற படத்தை இயக்கி உள்ளார். எஸ்.ஜே.சூர்யா ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் ஹீரோயினாக நடித்துள்ளார்.
Recommended Video
தயாரிப்பாளர் ரமேஷ் தயாரித்துள்ள இந்த படம் ஆகஸ்ட் 12 ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படத்தின் பிரஸ் ரிலீஸ் சென்னையில் சமீபத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் படத்தில் நடித்தவர்கள் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். விழாவில் எஸ்.ஜே.சூர்யா பேசுகையில், தயாரிப்பாளர் ரமேஷ் மிகவும் திறமையானவர். அவரின் கடின உழைப்பால் தான் இந்த படம் உருவானது. இந்த படத்தின் கதையை வெங்கட் என்னிடம் சொன்ன போது, இது எவ்வளவு முக்கியமான ஒன்று என புரிந்து கொள்ளவில்லை.
இது போன்ற விஷயங்களை நான் செய்தது இல்லை. இந்த படத்தின் கதை தனித்துவமானது. அதனால் தான் இந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டேன். இந்த படத்தில் நான் நடித்துள்ள கேரக்டர் மிகவும் வித்தியாசமான ஒன்று.கோமா நிலையில் இருப்பது என்னுடைய கேரக்டர்.
நான் அமைதியாக இருக்க வேண்டும். அதே சமயம் எனது நடிப்பின் மூலம் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும். டப்பிங் பேசும் போது கூட எனது வாய் மூடி இருக்க வேண்டும். தொண்டை மட்டும் அசைய வேண்டும். மிகவும் கஷ்டமான விஷயம் இது. என்னை இயக்கும் டைரக்டர்களுக்கு நான் முழு சுதந்திரம் கொடுப்பேன். அவர்கள் என்ன சொல்கிறார்களோ அதை அப்படியே செய்வேன். இந்த படம் நிச்சயம் மிகப் பெரிய ஹிட் ஆகும். இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யப்படும் என்றார்.


Click it and Unblock the Notifications











