»   »  கடவுள் இருக்கான் குமாரு.... பணக் கஷ்டத்திலிருக்கும் மக்களை ரிலாக்ஸாக வைக்கும்!! #KIKfromNov18

கடவுள் இருக்கான் குமாரு.... பணக் கஷ்டத்திலிருக்கும் மக்களை ரிலாக்ஸாக வைக்கும்!! #KIKfromNov18

Posted By:
Subscribe to Oneindia Tamil

பணக்கஷ்டத்திலிருக்கும் மக்களை இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வைக்க கடவுள் இருக்கான் குமாரு படம் உதவும் என்று இயக்குநர் ராஜேஷ் எம் கூறினார்.

அம்மா கிரியேஷன்ஸ் டி சிவா தயாரித்துள்ள கடவுள் இருக்கான் குமாரு வருகிற வெள்ளிக்கிழமை நவம்பர் 18ஆம் தேதி வெளியாகிறது.


Kadavul Irukkan Kumaru to hit the screens on Nov 18

இதுகுறித்து படத்தின் இயக்குநர் ராஜேஷ் கூறுகையில், "இப்படம் 18ஆம் தேதி வெளியாக முக்கிய காரணம் இப்போது மக்கள் சந்தித்து வரும் பணப் பிரச்சனைதான். எல்லோரும் எங்களிடம் படத்தை வருகிற வெள்ளிகிழமை வெளியிடுமாறு கேட்டு கொண்டனர். கடவுள் இருக்கான் குமாரு திரைப்படம் வருகிற வெளியாகும் போது மக்கள் அதை மகிழ்சியுடன் பார்த்து ரசிக்க ஏதுவாக இருக்கும். கடவுள் இருக்கான் குமாரு மக்கள் அனைவரும் சிரித்து ரசித்து பார்க்கும் வகையில் காமெடி கலந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும்.


Kadavul Irukkan Kumaru to hit the screens on Nov 18

இந்தப் படம் 400 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகுகிறது. இது பெரிய நடிகர்களின் படங்களுக்கு நிகரான ஒரு வெளியீடாகும். ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்து ஒரு திரைப்படம் 400 திரையரங்குக்கு மேல் வெளியாவது இதுவே முதன் முறை," என்றார்.

English summary
Director Rajesh M says that his Kadavul Irukkan Kumaru will ease the hectic life of public.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil