விபத்தில் சிக்கினாரா காஜல் அகர்வால்? பதறிய ரசிகர்கள்.. நடிகை கொடுத்த விளக்கம்!
சென்னை: தமிழ், தெலுங்கு, இந்தி சினிமாவில் டாப் நடிகைகளில் ஒருவராக இருப்பர் நடிகை நடிகை காஜல் அகர்வால். இவர் சாலை விபத்தில் படுகாயம் அடைந்ததாகவும், சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்துவிட்டதாகவும் பரவின. இந்த அடிப்படை ஆதாரமற்ற வதந்திகளுக்கு, அவரே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
வதந்திக்கு முற்றுப்புள்ளி: இதுகுறித்து, நடிகை காஜல் அகர்வால் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் நேரடியாக வதந்திகளுக்கு பதிலளித்தார். அதில், தான் நலமாகவும், பாதுகாப்பாகவும் இருப்பதாக இருக்கிறேன். எனக்கு விபத்து ஏற்பட்டுவிட்டதாகவும், நான் உயிருடன் இல்லை என்றும் சில ஆதாரமற்ற செய்திகளை நான் கண்டேன். இது முற்றிலும் உண்மை இல்லாதது. கடவுளின் அருளால், நான் நலமாகவும், பாதுகாப்பாகவும், மிகவும் சிறப்பாகவும் இருக்கிறேன் என்று உங்களிடம் தெரிவித்துக்கொள்கிறேன். இணையத்தில் பரவும் இதுபோன்ற தவறான செய்திகளை யாரும் நம்பவோ அல்லது பரப்பவோ வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நேர்மறை மற்றும் உண்மை மீது நம் கவனத்தைச் செலுத்துவோம் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். காஜல் அகர்வாலின் இந்த விளக்கம் அவரது ரசிகர்களை நிம்மதி அடைய செய்துள்ளது.

நடிகை காஜல் அகர்வால்: 2004ம் ஆண்டு இந்தி திரைப்படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை காஜல் அகர்வால், அதைத் தொடர்ந்து தமிழில் பழனி என்ற படத்தில் நடித்தார். அதன் பின் விஜயுடன் துப்பாக்கி,ஜில்லா, அஜித்துடன் விவேகம், சூர்யாவுடன் மாற்றன், கார்த்திக்குடன் நான் மகான் அல்ல என அடுத்தடுத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்தார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி மொழிப்படத்திலும் நடித்து வந்த காஜல் அகர்வால், தனது நீண்ட நாள் நண்பரும், தொழிலதிபர் கௌதம் கிச்லுவை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு 2022 ஆம் ஆண்டு மகன் நீல் பிறநந்தார்.
கண்ணப்பா: திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து நடித்து வரும் காஜல் அகர்வால் கடைசியாக கடந்த மாதம் வெளியான 'கண்ணப்பா' என்ற புராண திரைப்படத்தில், பார்வதி தேவி கதாபாத்திரத்தில் நடித்தார். இதில் அக்ஷய் குமார் சிவன் கதாபாத்திரத்திலும்,விஷ்ணு மஞ்சு கண்ணப்பராகவும் நடித்தார். இந்த படத்தில் காஜலின் நடிப்பு, கதைக்கு ஆழத்தையும், அழகையும் சேர்த்து, அவர் திறமையானவர் என்பதை மீண்டும் ஒருமுறை இந்த படத்தல் நிரூபித்து இருந்தார்.


Click it and Unblock the Notifications











