கேட்ட சம்பளம் கிடைச்சிடுச்சா? மெகாஸ்டார் படத்தில் இருந்து விலகினார் த்ரிஷா, இணைந்தார் நடிகை காஜல்!

By

ஐதராபாத்: மெகா ஸ்டார் நடித்த படத்தில் இருந்து, த்ரிஷா விலகியதை அடுத்து காஜல் அகர்வால் இணைந்துள்ளார்.

தமிழில் முன்னணி நடிகையாக இருப்பவர் த்ரிஷா. தமிழ் தவிர, தெலுங்கு மலையாளப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

இவர் மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக ராம் படத்தில் நடித்து வருகிறார்.

சிரஞ்சீவியின் ஆச்சார்யா

சிரஞ்சீவியின் ஆச்சார்யா

இதை த்ரிஷ்யம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்குகிறார். இதற்கிடையே தெலுங்கில் சிரஞ்சீவியின் 'ஆச்சார்யா' படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பந்தம் ஆனார். இந்தப் படத்தை கொரட்டலா சிவா இயக்குகிறார். இதில் நடிகை ரெஜினா ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். அவர் சிறப்பாக ஆடியுள்ளதாக சிரஞ்சீவி சமீபத்தில் பாராட்டி இருந்தார். இந்தப் படத்தின் டைட்டிலை படக்குழு ரகசியமாக வைத்திருந்தது.

மன்னிப்புக் கேட்டார்

மன்னிப்புக் கேட்டார்

ஆனால், சமீபத்தில் நடந்த விழா ஒன்றில், கேஷூவலாக ஆச்சார்யா என்று படத்தின் டைட்டிலை வெளியிட்டு விட்டார் சிரஞ்சீவி. இதற்காக இயக்குனரிடம் மன்னிப்புக் கேட்டார் அவர். இந்தப் படத்தில் கெஸ்ட் ரோலில், அவர் மகன் ராம்சரண் நடிபபதாகக் கூறப்படுகிறது. அவர் ஜோடியாக, இன்னொரு ஹீரோயின் நடிக்க இருக்கிறார். இதில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த த்ரிஷா, சமீபத்தில் படப்பிடிப்பில் கலந்து கொள்வதாக இருந்தது.

விலகிக் கொள்கிறேன்

விலகிக் கொள்கிறேன்

இந்தப் படத்தின் மூலம் 5 வருடத்துக்குப் பிறகு அவர், தெலுங்கு சினிமாவுக்கு வர இருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தில் இருந்து, தான் விலகிவிட்டதாக, தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்து இருந்தார் நடிகை த்ரிஷா. இதுபற்றி, 'படைப்பு ரீதியான வேறுபாடு காரணமாக, சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகி கொள்கிறேன். அந்தப் படக்குழுவுக்கு வாழ்த்துகள். சிறந்த படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்களை விரைவில் சந்திக்கிறேன் என்று அவர் தெரிவித்து இருந்தார்.

காஜல் அகர்வால்

காஜல் அகர்வால்

இந்தப் படத்தில் இன்னொரு ஹீரோயின் நடிப்பதும் அவருக்கு முக்கியத்துவம் இருப்பதும்தான் த்ரிஷா விலகியதற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் காஜல் அகர்வாலிடம் படக்குழு பேசி வந்தது. அவர் அதிக சம்பளம் கேட்டதாகவும் இதனால் அவர் நடிப்பது சந்தேகம் என்றும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் காஜல், அந்தப் படத்தில் ஒப்பந்தமாகி விட்டார் என்று தெரிகிறது. இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X