»   »  முத்தக் காட்சிகளில் நடித்து முடிப்பதற்குள் வெட்கம் பிடுங்கித் தின்னும்: காஜல்

முத்தக் காட்சிகளில் நடித்து முடிப்பதற்குள் வெட்கம் பிடுங்கித் தின்னும்: காஜல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: காதல் காட்சிகளில் நடிக்க வெட்கம் வெட்கமாக இருப்பதாக காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

காஜல் அகர்வால் ஒரே நேரத்தில் தல அஜீத் மற்றும் விஜய் படத்தில் நடித்து வருகிறார். கைதி எண் 150 படம் ஹிட்டானதற்கு பிறகு தெலுங்கிலும் மார்க்கெட் பிக்கப்பாகி சூப்பராக சென்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில் காதல் காட்சிகளில் நடிப்பது குறித்து காஜல் கூறுகையில்,

முத்தம்

முத்தம்

காதல் காட்சிகள் மற்றும் முத்தக் காட்சிகளில் நடிப்பது குறித்து ஒரு காலத்தில் பரபரப்பாக பேசினார்கள். ஆனால் தற்போது அது சர்வ சாதாரணமாகிவிட்டது.

நடிகைகள்

நடிகைகள்

முத்தம் மற்றும் நெருக்கமான காதல் காட்சிகளில் நடிக்க தற்போதைய நடிகைகளும் தயங்குவது இல்லை. அந்த காட்சிகளை ரசிகர்களும் சாதாரண காட்சிகளை போன்று பார்க்கிறார்கள்.

கஷ்டம்

கஷ்டம்

காதல் மற்றும் முத்தக் காட்சிகளில் நடிப்பது எளிது அல்ல. படக்குழுவுக்கு முன்பு குட்டி குட்டியாக உடை அணிந்து ஹீரோவுடன் நெருக்கமாக நடிக்க வேண்டும்.

வெட்கம்

வெட்கம்

முத்தக் காட்சிகளில் நடிப்பது பற்றி சொல்லவே தேவையில்லை. படக்குழுவுக்கு முன்பு ஹீரோவுக்கு முத்தம் கொடுப்பதற்குள் வெட்கம் பிடுங்கித் தின்னும். இதில் படப்பிடிப்பை பார்க்க ரசிகர்கள் வந்தால் கூச்சம் அதிகமாகும். நான் காதல் மற்றும் முத்தக் காட்சிகளில் நடிக்க கஷ்டப்படுகிறேன். அந்த காட்சிகளில் நடிக்க வெட்கம் வெட்கமாக இருக்கிறது என்றார் காஜல்.

English summary
Actress Kajal Agarwal said that she is feeling shy to act in love and kissing scenes. Kajal is acting with Thala and Thalapathy now.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil