»   »  கலைஞரின் புதிய சானல்கள்

கலைஞரின் புதிய சானல்கள்

Subscribe to Oneindia Tamil


புதிதாக தொடங்கப்பட்டுள்ள கலைஞர் டிவி குழுமத்திலிருந்து மேலும் 2 புதிய சானல்கள் வெளியாகவுள்ளன.

சன் டிவியை கை கழுவிய பிறகு திமுக ஆரம்பித்துள்ள புதிய டிவிதான் கலைஞர் டிவி. சன் டிவிக்கு நிகராக கலைஞர் டிவிக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

பாமகவின் மக்கள் டிவியைப் போலவே கலைஞர் டிவியும் முடிந்தவரை நல்ல தமிழ் என்ற பாணியைக் கடைப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் கலைஞர் டிவி வட்டாரத்திலிருந்து மேலும் 2 புதிய சானல்கள் வரவுள்ளன. ஒன்று, 24 மணி நேர இசை சானல், அதற்கு இசையருவி என பெயரிட்டுள்ளனர். இன்னொன்று கலைஞர் செய்தி.

இசையருவி சானல், நவம்பர் 2வது வாரத்தில் ஒளிபரப்புக்கு வருகிறது. செய்தி சானல் டிசம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும்.

இதுகுறித்து கலைஞர் டிவியின் இயக்குநர் சரத்குமார் கூறுகையில், இசையருவி சானலில் 24 மணி நேரமும் பாடல்கள் ஒளிபரப்பாகும். இதில் புதிய பாடல்கள் மட்டுமல்லாது நெஞ்சில் நீங்கா இடம் பிடித்திருக்கும் பழைய பாடல்களுக்கும் முக்கியத்துவம் வழங்கப்படும்.

செய்தி சானலில் பல திறமைசாலிகள் இடம்பெற்றுள்ளனர். நேரடி ஒளிபரப்புடன் செய்திகள் வழங்கப்படும். அரசியல் பிரமுகர்களின் பேட்டிகளும் இடம் பெறும் என்றார்.

Read more about: kalaignar tv, suntv
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil