»   »  விஷால்.. தயாரிப்பாளர்களை விமர்சிக்க உனக்கு என்ன தகுதி இருக்கு? - சீறிய கலைப்புலி தாணு

விஷால்.. தயாரிப்பாளர்களை விமர்சிக்க உனக்கு என்ன தகுதி இருக்கு? - சீறிய கலைப்புலி தாணு

Posted By:
Subscribe to Oneindia Tamil

தயாரிப்பாளர்களை விமர்சிக்க உனக்கு என்ன உரிமை இருக்கிறது... உன்னால் உன் அப்பா ஜிகே ரெட்டிக்கே அவமானம், என்று விஷாலை வெளுத்து வாங்கினார் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் கலைப்புலி தாணு.

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு விஷால் போட்டியிடுகிறார். இதுகுறித்த செய்தியாளர் சந்திப்புகளில் தயாரிப்பாளர்கள் குறித்து தரக்குறைவாக விஷால் பேசியதாகக் கூறி, இன்று நடிகர் சங்கத்தை முற்றுகையிட்டனர் தயாரிப்பாளர்கள்.

கலைப்புலி தாணு, ராதாகிருஷ்ணன், சுரேஷ் காமாட்சி உள்ளிட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

Kalaipuli Thaanu blasts Vishal

அப்போது விஷாலின் நடவடிக்கைகள், பேச்சுகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்த முன்னணி தயாரிப்பாளரும், இப்போதைய தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான கலைப்புலி தாணு, விஷால் இத்துடன் தனது விஷமத்தனத்தை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

பொதுவாக, எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிப்பவர் தாணு. ஆனால் அவரையே கோபப்படுத்தி விட்டார்கள் விஷாலும் பிரகாஷ் ராஜும். நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் விஷாலும், பிரகாஷ் ராஜும் தாணுவை கடுமையாகப் பேசினர். குறிப்பாக பிரகாஷ் ராஜ்.

இதற்கெல்லாம் இன்று வட்டியும் முதலுமாக சேர்த்துக் கொடுத்தார் கலைப்புலி.

அவர் பேசுகையில், 'தயாரிப்பாளர்களை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய்... அவர்களை விமர்சிக்க உனக்கு என்ன தகுதி இருக்கிறது? 1200 உறுப்பினர்களுடன் மிக மரியாதைக்குரிய அமைப்பாக உள்ள தயாரிப்பாளர் சங்கத்தை விமர்சிக்க நீ யார்? என்ன தகுதி இருக்கிறது? உன்னால் உன் தந்தை தயாரிப்பாளர் ஜிகே ரெட்டிக்கே அவமானம். உன்னால் எத்தனை தயாரிப்பாளர்கள் நடுத்தெருவுக்கு வந்திருக்கிறார்கள்... நினைத்துப் பார்த்ததுண்டா?

யாரிடமும் கை நீட்டி நிற்காத செல்லமே தயாரிப்பாளர் உன்னால் பட்ட கஷ்டங்கள் நினைவில்லையா? மத கஜ ராஜா என்ற படத்தை எடுத்துவிட்டு நடுத் தெருவுக்கு வந்துவிட்ட ஜெமினி நிறுவனத்தை நினைத்துப் பார்...

கண்ணியமான மனிதர் நாசர் அவர்களே... இந்த விஷால் மீது நடவடிக்கை எடுங்கள். அல்லது நாங்கள் நடவடிக்கை எடுப்போம்," என்றார்.

English summary
Producers Council Head Kalaipuli Thaanu has blasted actor Vishal for his comments against producers council

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil