Don't Miss!
- News
சென்னையில் பிப்ரவரி 1,2 தேதிகளில் ஜி20 கல்விப் பணிக் குழுவின் முதலாவது கூட்டம்
- Lifestyle
இந்த சூப்பர் உணவுகள் தாமதமான உங்கள் மாதவிடாயை சில மணி நேரங்களில் வரவைக்குமாம்...!
- Technology
யூஸ் பண்றீங்களோ இல்லயோ.. உங்க லேப்டாப்பில் இந்த வெப் ப்ரவுஸர் இருக்கா? அப்போ அலெர்ட் ஆகிக்கோங்க!
- Sports
"அந்த ஒரு விஷயம்.. உலகில் சூர்யகுமாரிடம் மட்டுமே உள்ள திறமை.. ரிக்கிப் பாண்டிங் புகழாரம் - விவரம்
- Automobiles
டாடாவை கதையை முடிக்க பிளான்... ரயிலைபோல் அடுத்தடுத்து ஆறு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்கு போகிறது மாருதி சுஸுகி!
- Finance
2 நாளில் 12 லட்சம் கோடி ரூபாய் அவுட்.. சென்செக்ஸ் 800 புள்ளிகளுக்கு மேல் சரிவில் முடிவு..!
- Travel
சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
திருமண நாள் வாழ்த்துக்கள் கூறிய காளிதாஸ் ஜெயராம் .. யாருக்குன்னு தெரியுமா?
கொச்சின் : தன் அப்பா அம்மாவுக்கு திருமண நாள் வாழ்த்துக்கள் கூறி இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் காளிதாஸ் ஜெயராம் .
Recommended Video
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான காளிதாஸ், தனது முதல் படத்திலேயே சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான விருதை தட்டி சென்றார்.
பிரபல மலையாள நடிகரான ஜெயராமின் மகனான இவர் நடிப்பிலும் அப்பாவை போலவே வெளுத்து வாங்குவார் .
விநாயகர்
சதுர்த்திக்கு
அசத்த
வருது
'ருத்ர
தாண்டவம்
'முதல்
பாடல்!

தெனாலி டாக்டர்
பிரபல மலையாள நடிகரான ஜெயராம், தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பிடித்த ஒரு நடிகர் ஆவார். தெனாலி படத்தில் அவரது நடிப்பு, படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது .முக்கியமாக பயம் பயம் என்று கமல் பேசும் வசனம் வரும் சீனில் அனைவரின் நடிப்பும் பிரமாண்டம் .

கமல் படங்கள்
பல தமிழ் படங்களில் நடித்துள்ள ஜெயராம், நளதமயந்தி ,பஞ்சதந்திரம் , உத்தம வில்லன் போன்ற பல வெற்றி படங்களை கமலுடன் இணைந்து கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் குஷ்பு ,கவுண்டமணியுடன் நடித்த முறை மாமன் மற்றும் மந்த்ராவுடன் நடித்த பெரிய இடத்து மாப்பிள்ளை போன்ற காமெடி படங்கள் மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவை.

குழந்தை நட்சத்திரம்
மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது மகன் காளிதாஸ் ஜெயராமை அறிமுகம் செய்தார் .பிறகு குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருதையும் பெற்றார் காளிதாஸ் ஜெயராம் .எனினும் தமிழ் படத்திலேயே தன்னை அறிமுக நாயகனாக அறிமுகம் செய்து கொண்டார் காளிதாஸ் .சில படங்கள் மட்டுமே நடித்து இருந்தாலும் தனது அழகாலும்,அற்புதமான நடிப்பாலும் ,ரசிகர்களை குவித்துள்ளார்.

விக்ரம் படத்தில்
தற்போது கமல் ஹாசன் நடித்து வரும் படமான விக்ரம் படத்திலும் காளிதாஸ் நடித்துகொண்டு இருக்கிறார் .அந்தோலஜி படமான பாவ கதைகள் படத்திலும் தங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

திருமண வாழ்த்துக்கள்
நேற்று திருமண நாளை கொண்டாடிய தனது பெற்றோருக்கு தனது திருமண நாள் வாழ்த்துக்களை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் காளிதாஸ் .அழகான குடும்ப புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ,வாழ்த்துக்களையும்,பாராட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர் .பதிவை பதிவிட்ட ஒரு மணி நேரத்திற்குள் சுமார் நாற்பதாயிரம் லைக்ஸ் அள்ளியது .தற்போது இரண்டு லட்சங்கள் லைக்ஸ் தாண்டி பல கமெண்ட்ஸ் ரசிகர்கள் கொடுத்த வண்ணம் உள்ளனர் .