»   »  ரத்தத்தால் காதல் கடிதம் எழுதிய ரசிகை: அப்படியே 'ஷாக்' ஆன வாரிசு நடிகர்

ரத்தத்தால் காதல் கடிதம் எழுதிய ரசிகை: அப்படியே 'ஷாக்' ஆன வாரிசு நடிகர்

Posted By:
Subscribe to Oneindia Tamil

திருவனந்தபுரம்: நடிகர் ஜெயராமின் மகனும் நடிகருமான காளிதாஸுக்கு ரசிகை ஒருவர் தனது ரத்தத்தால் காதல் கடிதம் எழுதியுள்ளார்.

நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் மீன் குழம்பும் மண் பானையும் படம் மூலம் ஹீரோவாகியுள்ளார். முன்னதாக அவர் மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது பெற்றவர்.

Kalidas receives love letter written in blood

தனது தந்தையை போன்று மிமிக்ரியிலும் வல்லவர். இந்நிலையில் காளிதாஸுக்கு ரசிகை ஒருவர் தனது ரத்தத்தால் காதல் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது, கண்ணேட்டா லவ் யூ என்பது தான்.

கண்ணா என்பது காளிதாஸின் செல்லப் பெயராம். இந்த கடித்தத்தை காளிதாஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போட்டு கூறியதாவது,

நீங்கள் என்னை மகிழ்ச்சிபடுத்த விரும்பினால் தியேட்டருக்கு சென்று என் படங்களை பாருங்கள். அது போதும். இது போன்ற காரியங்கள் என்னை கவலை அடைய செய்யும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து காளிதாஸை பலரும் கிண்டல் செய்தனர். இந்நிலையில் அவர் அந்த போஸ்ட்டை நீக்கிவிட்டார்.

English summary
Actor Kalidas Jayaram has received a love letter written in blood from a female fan which shocked him.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil