»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சுனாமி நிவாரண நிதிக்காக இசைஞானி இளையராஜா, கமல்ஹாசன் உள்ளிட்டோர் இன்று முதல்வர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து நிதிவழங்கினர்.

சுனாமி நிவாரணத்திற்காக ஜெயலலிதாவிடம் இன்று மட்டும் ரூ. 10 கோடி அளவுக்கு நிதி சேர்ந்தது.

இசைஞானி இளையராஜா ஜெயலலிதாவை சந்தித்து ரூ. 5 லட்சம் வழங்கினார். பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களிடம்பேசுகையில், இயற்கை சீற்றத்தால் ஏற்பட்டு விட்ட பெரும் பாதிப்பைத் துடைக்க அரசு செய்யும் சேவைக்கு என்னாலான சிறு உதவியைசெய்துள்ளேன் என்றார்.

இதேபோல நடிகர் கமல்ஹாசன் ரூ. 21 லட்சத்திற்கான காசோலையையும், நடிகர் விவேக் ரூ. 1 லட்சமும், நடிகை அஞ்சலி தேவி ரூ. 1லட்சமும் வழங்கினர்.

இதேபோல நெடுஞ்சாலைத் துறை சார்பில் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ரூ. 22.19 லட்சம், சுகாதாரத்துறை சார்பில் அமைச்சர் தளவாய்சுந்தரம் ரூ. 94.30 லட்சம், பிற்பட்டோர் நலத்துறை சார்பில் அமைச்சர் செ.மா. வேலுச்சாமி ரூ. 10.37 லட்சம்,

சி.எம்.டி.ஏ. சார்பில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ரூ. 3 கோடி, செய்தி விளம்பரத்துறை சார்பில் அமைச்சர் கே.பி.அன்பழகன் ரூ.2.20 கோடி, விளையாட்டுத்துறை சார்பில் அமைச்சர் இன்பத்தமிழன் ரூ. 3 லட்சம் நிதி வழங்கினர்.

நெல்லை, தூத்துக்குடி நாடார் மகிமை பரிபாலன சங்கத் தலைவர் மயிலை பெரியசாமி ரூ. 1.21 லட்சம் வழங்கினார். மொத்தம் ரூ. 9கோடியே 73 லட்சத்து 40 ஆயிரத்து 537 இன்று ஜெயலலிதாவிடம் வழங்கப்பட்டது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil