»   »  திரைத் துளி

திரைத் துளி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

55வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, நடிகர் கமலஹாசனின் ரசிகர்களுடைய 55 பெற்றோர்கள் கண் தானம் செய்யமுன்வந்துள்ளனர்.

கமலஹாசன் நற்பணி மன்றத்தின் சார்பில் நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னையில் 55-வது சுதந்திர தின விழாகொண்டாடப்படுகிறது. ஆழ்வார்ப்பேட்டையில் நடைபெறும் இந்த விழாவில் கமலஹாசன் கலந்து கொண்டுபல்வேறு உதவிகளை வழங்குகிறார்.

இவற்றில் முக்கியமானது கமல் ரசிகர்கள் 55 பேரின் பெற்றோர்கள் கண் தானம் வழங்க முன்வந்துள்ளனர்என்பதாகும்.

நிகழ்ச்சியின்போது, இதுதொடர்பான சான்றிதழ்களில் அவர்கள் கையெழுத்து இடுகின்றனர். பின்னர் எய்ட்ஸ்நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்குத் தேவையான உடைகள்உள்ளிட்ட உதவிகளை "உதவும் உள்ளங்கள்" அமைப்பின் நிர்வாகியிடம் நடிகர் கமல்ஹாசன் வழங்குகிறார்.

பத்தாவது மற்றும் 12-வது வகுப்பு படிக்கும் ஏழை மாணவ, மாணவியருக்குத் தேவையான இலவச கம்ப்யூட்டர்பயிற்சி வகுப்பையும் கமல் தொடங்கி வைக்கிறார்.

கமல்ஹாசனின் தாயார் ராஜலட்சுமி அம்மாள் நினைவுப் படிப்பகத்தையும் கமல் துவக்கி வைக்கிறார். வடசென்னைமாவட்ட கமல் ரசிகர் நற்பணி மன்றம் இதை துவக்குகிறது.

இதுதவிர "இதயக் கவசம்" என்ற மருத்துவப் புத்தகத்தையும் கமல் வெளியிடுகிறார். கோவை மாவட்ட கமல் ரசிகர்மன்றம், இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil