»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி மாநில அளவிலான தமிழ்ப் பேச்சுப் போட்டிக்கு கமல்ஹாசன்ரசிகர்கள் நற்பணி மன்றம் ஏற்பாடு செய்துள்ளது.

நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசனின் பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டும் தனது பிறந்த நாளின்போது தாயார்ராஜலட்சுமி நினைவாக இலக்கிய விருதும், தந்தை சீனிவாசன் பெயரில் நல உதவிகளையும், சமூக சேவைவிருதையும் வழங்குவது கமல்ஹாசனின் வழக்கம்.

இந்த ஆண்டு முதல் மாநில அளவிலான தமிழ்ப் பேச்சுப் போட்டியை நடத்த கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார்.கல்லூரி மாணவ, மாணவியர் இதில் கலந்து கொள்ளலாம். நவம்பர் 4ம் தேதி காலை 8.30 மணிக்கு மயிலாப்பூர்சமஸ்கிருத கல்லூரி வளாகத்தில் உள்ள சாவித்திரி அம்மாள் பள்ளியில் பேச்சுப் போட்டி நடைபெறவுள்ளது.

21-ம் நூற்றாண்டில் அகிம்சை வெல்லும் என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடைபெறும். இதில் வெற்றிபெற்றவர்களுக்கு 7ம் தேதி காலை 10 மணிக்கு, தேனாம்பேட்டை காமராஜர் அரங்கில் நடைபெறவுள்ளகமல்ஹாசன் பிறந்த நாள் விழா மற்றும் நற்பணி இயக்க 12-வது ஆண்டு விழாவின்போது பரிசுகள் வழங்கப்படும்.

முதல் பரிசாக ரூ.5,000, இரண்டாவது பரிசாக ரூ.2,500, மூன்றாவது பரிசாக ரூ.1000, ஆறுதல் பரிசாக ரூ.500வழங்கப்படும்.

பேச்சுப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது கல்லூரி முதல்வர் அல்லது தமிழ்த் துறைத்தலைவரிடமிருந்து தாங்கள் அந்தக் கல்லூரியில்தான் படிக்கிறோம் என்பதற்கான அத்தாட்சி சான்றிதழைப் பெற்று,தேனாம்பேட்டை-திருவள்ளுவர் சாலையில் உள்ள கமல்ஹாசன் நற்பணி இயக்க அலுவலகத்திற்கு நவம்பர் 3ம்தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

போட்டியில் கலந்து கொள்பவர்கள் தலைப்பை ஒட்டியோ, வெட்டியோ 3 நிமிடத்திற்குள் பேசி முடிக்க வேண்டும்.

இத்தகவலை கமல்ஹாசன் நற்பணி இயக்க செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil