அசீம் செய்த தவறு.. சரியான பாயிண்ட் சொன்ன FilmiBeat... அதையே சுட்டிக் காட்டி கமல் கொடுத்த அட்வைஸ்
சென்னை: விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், அசீம் தான் இப்போதைய பேசு பொருளாக உள்ளார்.
சீரியல் நடிகர் அசீம் தொடர்ந்து சக போட்டியாளர்களை தரக்குறைவாக பேசிவிட்டு அதற்கு விளக்கம் கொடுத்ததற்கு கமல் கடும் கண்டனம் தெரிவித்தார்.
அசீம் மீது கமல் வைத்த குற்றச்சாட்டுகளையும் கண்டனங்களையும் தமிழ் FilmiBeat "பிக் பாஸ் வீட்டில் அசீம் கொடுத்த விளக்கம் சரியா தவறா...?" என்ற தலைப்பில் வெளியான செய்தியில் ஏற்கனவே சுட்டிக் காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் வீட்டில் அசீம்
பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கடந்த வாரம் அசீம், ஆயிஷா, விக்ரமன் மூவருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு பலரது கண்டனங்களை பெற்றது. காரணம் அப்போது விக்ரமன், ஆயிஷா இருவரையும் அசீம், ரொம்பவே தரக்குறைவான வார்த்தைகளால் வசை பாடினார். இந்த சம்பவத்தால் அசீம்க்கு பிக் பாஸ் போட்டியாளர்கள் மட்டும் இல்லாமல், பார்வையாளர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதுமட்டும் இல்லாமல், போட்டியாளர்களும் அசீமிற்கு ரெட் கார்டு கொடுத்தனர்.

மன்னிப்பும் விளக்கமும்
இதனையடுத்து அகம் டிவி வழியே இந்த சம்பவம் குறித்து கமல் அசீமிடம் கேள்வி எழுப்பினார். அப்போது அவர் மன்னிப்பு கேட்டதோடு, இனி அப்படி நடந்துகொள்ள மாட்டேன் என விளக்கம் கொடுத்திருந்தார். ஆனால், அப்படியும் திருந்தாமல் நானும் பொம்மை நீயும் பொம்மை டாஸ்க்கிலும் அசீம் நடந்துகொண்ட விதம் ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியது. இந்த முறை தனலட்சுமி, ஷிவின் ஆகியோரை டார்க்கெட் செய்த அசீம் அவர்களிடம் கடுமையாக சண்டை போட்டார். அசீம் தொடர்ந்து இவ்வாறு நடந்துகொள்வது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அசீம் என்னதான் மன்னிப்புக் கேட்டு விளக்கம் கொடுத்தாலும், அவர் திருந்துவதற்கு வாய்ப்பே இல்லை என தமிழ் FilmiBeat ஏற்கனவே குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ் FilmiBeat-இன் கணிப்பு
கடந்த 23ம் தேதி "பிக் பாஸ் வீட்டில் அசீம் கொடுத்த விளக்கம் சரியா தவறா...?" என்ற தலைப்பில் தமிழ் FilmiBeat ஒரு செய்தி வெளியிட்டிருந்தது. அதில், "அசீம் பெரும்பாலும் தனது மகன் ரையான் குறித்து நெகிழ்ச்சியோடும் வலியோடும் பேசி வருகிறார். அப்படி இருக்கும் போது தனது மகன் இந்த சம்பவத்தை பார்த்தால், அவனது மனநிலை எப்படி இருந்திருக்கும் என அசீம் யோசித்திருக்க வேண்டாமா எனவும். அசீம் தரக்குறைவாக சண்டை போட்டதை அவரது மகன் பார்த்திருந்தால், தந்தை மீது அவனுக்கு வெறுப்புணர்வு வந்துவிடாதா, இதையெல்லாம் யோசிக்க வேண்டாமா?" என குறிப்பிடப்பட்டிருந்தது.

சுட்டிக் காட்டிய கமல்
இந்நிலையில், அகம் டிவி வழியே பேசிய கமலிடம் கடந்த வாரம் பொம்மை டாஸ்க்கில் நடந்துகொண்ட விதம் குறித்தும் அசீம் மன்னிப்புக் கேட்டார். ஆனால், அசீமின் மன்னிப்பையும் விளக்கத்தையும் ஏற்றுக்கொள்ளாத கமல், "உங்கள் மகன் சார்பாக கண்டிக்கிறேன்... தப்பாக பேசினால் எல்லாமே தப்பாகத் தான் போகும்... உங்கள் விளக்கங்கள் தேவையில்லை..." என பல இடங்களில் அசீமை கார்னர் செய்தார். அதவது, "உங்கள் மகன் உங்கள் நடத்தையை சரி என்று பின்பற்ற வாய்ப்புண்டு. ஆகவே உங்கள் மகன் சார்பாக உங்களை கண்டிக்கிறேன். உங்கள் மகன் மட்டுமல்ல இங்கு வெளியில் உங்கள் மகன் போல் ஏராளமான மகன்கள் நிகழ்ச்சியை பார்க்கிறார்கள். அவர்கள் இதை சரி என்று நினைத்துவிடக்கூடாது என்பதற்காக கண்டிக்கிறேன்" என்றார். மகன் சார்பாக கமல் கண்டித்ததை தான், கடந்த வாரமே தமிழ் FilmiBeat சுட்டிக் காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், அவர் என்னதான் விளக்கம் கொடுத்தாலும், மீண்டும் திருந்த வாய்ப்பே இல்லை என்றும் FilmiBeat கூறியிருந்தது. அதையே தான் கமலும் அசீமிடம் விளக்கம் தேவையில்லை என கறாராகக் கூறினார்.

அடுத்த வாரம் அசீம் எவிக்சன்?
தொடர்ந்து இரண்டு வாரங்களாக அசீம் மீதான விமர்சனங்கள் அதிகரித்து வரும் நிலையில், அவர் ஒவ்வொரு முறையும் மன்னிப்புக் கேட்டு சமாளித்து வருகிறார். இந்தமுறை கமல் ரொம்பவே கண்டித்திருந்தாலும் அவர் இன்னும் யதார்த்தத்தை புரிந்துகொள்ளவில்லை. அசீம் மரியாதை குறைவாக பேசிவிடுவாரோ என பயமாக இருக்கிறது, அந்த துப்பாக்கி என்னை நோக்கி திரும்பிவிட்டால் எனக்கு அசிங்கமாகிவிடும் என ராபர்ட் மாஸ்டர் கூறியிருந்தது நூற்றுக்கு நூறு உண்மை என, ரசிகர்கள் கூறி வருகின்றனர். இதனிடையே, அசீம் அவ்வளவு மோசமாக பேசியும், அவரை தனலட்சுமி மன்னித்தது தரமான சம்பவமாகிப் போனது. மேலும் அடுத்த வாரத்துக்கான எவிக்சன் லிஸ்ட்டில் அசீம் இருப்பது, விளையாட்டை இன்னும் சூடாக்கியுள்ளது.


Click it and Unblock the Notifications











