Don't Miss!
- Technology
சர்ப்ரைஸ்.. பிப்.7 அன்று OnePlus 11 உடன் சேர்ந்து "ரகசியமாக" அறிமுகமாகும் இன்னொரு போன்!
- News
சபாஷ்.. மதவாத சக்திகளை வீழ்த்த கமல்ஹாசன் ஆதரவு.. காங்கிரஸ் பாராட்டு மழை
- Sports
கோலி தந்த ஐடியா தான் அது.. நியூசி,யின் மிடில் ஆர்டரை சுருட்டியது எப்படி?.. ஷர்துல் சுவாரஸ்ய பதில்!
- Lifestyle
கும்பத்தில் சனி அஸ்தமனமாவதால் ஜனவரி 30 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப் போகுது...
- Automobiles
ஆட்டோ மாதிரி ஓடும், ஸ்டாண்ட் போடவே தேவை இல்ல... செல்ஃப்-பேலன்ஸிங் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் - பெய்கோ எக்ஸ்4!!
- Finance
ஜன.26 அல்வா நிகழ்ச்சி.. பட்ஜெட் பணிகள் ஓவர்.. 1ஆம் தேதி ரெடி..!
- Travel
கடவுள்கள் பேசுமா? ஆம்! இந்தியாவில் உள்ள இந்த கோவிலில் கடவுள்கள் பேசுகின்றனவாம்! ஆச்சரியமாக இருக்கிறதா?
- Education
CRPF Head constable Recruitment 2023:பிளஸ் டூ பாஸ்? 1,458 பணிக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி வாய்ப்பு...!
மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன்... கூட்டணியில் இணையும் கமல், ஜீவா..? கொல மாஸ் அப்டேட்
திருவனந்தபுரம்: மலையாள முன்னணி நடிகர் நடித்துள்ள Alone திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது.
இதனைத் தொடர்ந்து லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கும் நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
வித்தியாசமான ஜானர்களில் படங்களை இயக்கி வரும் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி முதன்முறையாக மோகன் லாலுடன் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மலைக்கோட்டை வாலிபன் என்ற டைட்டிலில் உருவாகும் இந்தப் படத்தில் கோலிவுட்டில் இருந்து இரண்டு முன்னணி நடிகர்கள் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தளபதி
ஸ்டைலில்
ஜெயிலர்...
கேங்ஸ்டராகும்
மோகன்லால்...
கோலிவுட்டின்
அடுத்த
ஃபேன்
பாய்
சம்பவம்

மோகன்லாலின் மலைக்கோட்டை வாலிபன்
மலையாள திரையுலகில் முன்னணி நடிகராக கலக்கி வரும் மோகன்லால், ஆண்டுக்கு 3 முதல் 4 திரைப்படங்கள் வரை நடித்து வருகிறார். கடந்தாண்டு 12த் மேன், அராட்டு, ப்ரோ டேடி, மான்ஸ்டர் போன்ற படங்கள் மோகன்லால் நடிப்பில் வெளியாகின. இதனைத் தொடர்ந்து நாளை Alone என்ற திரைப்படமும் மோகன்லால் நடிப்பில் ரிலீஸாகிறது. இதனையடுத்து லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கும் மலைக்கோட்டை வாலிபன் படத்தில் நடிக்க மோகன்லால் கமிட் ஆகியுள்ளார்.

லிஜோ ஜோஸ் பெல்லிசேரியுடன் கூட்டணி
டபுள் பேரல், அங்கமாலி டைரீஸ், ஈ.மா.யூ, ஜல்லிக்கட்டு, சுருளி போன்ற வித்தியாசமான படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி. கடைசியாக இவர் இயக்கிய நண்பகல் நேரத்து மயக்கம் திரைப்படம் கடந்த வாரம் ரிலீஸாகி மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. மம்முட்டியும் லிஜோ ஜோஸ் பெல்லிசேரியும் முதன்முறையாக கூட்டணி வைத்துள்ள இந்தப் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனால் மோகன்லால் லிஜோ ஜோஸ் இணையும் மலைக்கோட்டை வாலிபன் படமும் அதிக எதிர்பார்ப்பில் உள்ளது.

மோகன்லாலுடன் இணையும் கமல்
ஒவ்வொரு படங்களையும் வித்தியாசமான ஜானரில் இயக்கும் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி, மலைக்கோட்டை வாலிபனிலும் வெரைட்டி காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தான் இந்தப் படத்தில் மோகன்லாலுடன் கமலும் நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. கமல் கேமியோ ரோலில் நடிக்கலாம் எனவும், அதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக மலைக்கோட்டை வாலிபன் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது.

இளம் ஹீரோ ஜீவா
மோகன்லால், கமல் ஆகியோருடன் கோலிவுட்டின் இளம் ஹீரோ ஜீவாவும் இந்தப் படத்தில் நடிப்பதாகக் கூறப்படுகிறது. ஜீவாவுக்கு முக்கியமான கேரக்டர் என்றும், இது அவரது கேரியரில். நிச்சயமாக தரமான சம்பவமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. கமல் - மோகன்லால் கூட்டணி கடைசியாக உன்னைப்போல் ஒருவன் படத்தில் நடித்திருந்தனர். அதன்பின்னர் மலைக்கோட்டை வாலிபன் படத்தில் நடிக்கலாம் என்ற தகவல் ரசிகர்களிடம் ஆர்வத்தை தூண்டியுள்ளது.