twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    "என்னது.. என் பாட்டில் பிழையா..?" - அப்போ இவ்ளோ நாளா ட்வீட் போட்டது யாரு சாரே?

    By Vignesh Selvaraj
    |

    Recommended Video

    எழுத்துப் பிழைகளோடு ட்வீட் செய்தபோதெல்லாம் மன்னிப்பு கேட்க தோன்றவில்லையா கமல் - நெட்டிசன்கள்

    சென்னை : நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பணிகளை முடுக்கி விட்டுள்ளார். இதற்காக தனது நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் தொடர் சந்திப்பில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், தான் எழுதிய கவிதை பிரபல வார இதழொன்றில் பிழையோடு வந்திருப்பதற்காக மன்னிப்பு தெரிவித்து ஒரு ட்வீட் போட்டிருக்கிறார்.

    அப்படியானால், இவ்வளவு நாட்களாக ட்விட்டரில் எழுத்துப் பிழைகளோடு ட்வீட் செய்தபோதெல்லாம் மன்னிப்பு கேட்க தோன்றவில்லையா என நெட்டிசன்கள் கேட்டு வருகின்றனர்.

    அரசியலில் கமல்ஹாசன்

    அரசியலில் கமல்ஹாசன்

    நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பணிகளை முடுக்கி விட்டுள்ளார். இதற்காக தனது நற்பணி மன்ற நிர்வாகிகளுடன் தொடர் சந்திப்பில் ஈடுபட்டு வருகிறார். பல்வேறு நலத்திட்டப் பணிகளை செய்து வரும் நற்பணி மன்றத்தினரை, செயல்பாடுகளை அதிகப்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.

    கலந்துரையாடல்

    கலந்துரையாடல்

    வருகிற 21-ம் தேதி முதல் தாம் நடத்த இருக்கும் கூட்டங்கள் ஒருவழிப்பாதையாக தாம் மட்டும் பேசுவதாக இருக்காது என்றும், பெரியார் பாணியில் கலந்துரையாடல்களாக இருக்கும் என்றும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதில் பங்கேற்க விரும்புவோர் முன்பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

    இந்து விரோதி அல்ல

    இந்து விரோதி அல்ல

    பிரபல வார இதழ் ஒன்றில் கமல்ஹாசன் எழுதி வரும் தொடரில், "சிலருக்கு வேண்டப்பட்டவன், சிலருக்கு வேண்டப்படாதவன் என்ற தோற்றங்களை உருவாக்க சிலர் முயற்சிப்பதாக தெரிவித்துள்ளார். தாம் இந்து விரோதியல்ல என்றும் தெரியப்படுத்தியுள்ளார் கமல்ஹாசன்.

    கமல் கவிதை

    கமல் கவிதை

    தனது மகள் ஸ்ருதிஹாசன் உட்பட தமக்கு நெருக்கமான பலரும் பக்தியுடன் இருப்பதை தாம் தவறாகப் பார்க்கவில்லை என்று கூறிய கமல், அவர்களை வெறுக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார். 'பகுத்தறிந்தவர்களின் புலம்பல்' எனும் தனது கவிதையையும் அதில் குறிப்பிட்டுள்ளார் கமல்.

    கவிதையில் பிழை

    கவிதையில் பிழை

    அந்தக் கவிதையில் சில எழுத்துப் பிழைகள் சுட்டிக்காட்டப்பட்டன. அதுதொடர்பாக, ட்விட்டரில், "என் கவிதை தொலைபேசியில் நான் சொல்ல எழுதிச் சேர்த்ததால் பல பிழைகள் உள்ளன. மன்னிக்க. 2000 ல் நான் எழுதியதின் பிரதி கீழே." எனக் குறிப்பிட்டு தனது கவிதையை பகிர்ந்துள்ளார்.

    விளக்க உரை எழுதுங்க

    "இதுல பிழைய நீக்குனா என்ன நீக்கலனா என்ன, அதுக்கு பதிலா இதுக்கு ஒரு விளக்க உரை எழுதி அனுப்புங்க, அப்பவாவது புரியும் நாலு பேருக்கு போய் சேரும்" என ஒருவர் கமென்ட் செய்துள்ளார்.

    ட்வீட்டில் பிழை இருக்கே

    "நீங்கள் நடு இரவில் இடும் கீச்சுகளில் எண்ணற்ற பிழைகள் இருப்பதை திருத்தி மறு பிரசுரம் செய்வீர்களா?" என ஒருவர் கேட்டதற்கு இன்னொரு நெட்டிசன், "அந்த மறு பதிவிலும் பிழை இருக்குமே.. அதற்கு மறுபடியும் ஒரு பதிவு வரும்.. இப்படியே நிக்காம போயிட்டே இருக்கும்" என பதில் அளித்துள்ளார்.

    கமல் குரலில்

    "கிரகணாதிக்ரணங்கட்கு அப்பாலுமே.. ஒரு அசகாய சக்தியுண்டாம்..." இதை உங்கள் கம்பீரக் குரலில் கேட்க மெய் சிலிர்க்கிறது" என ஒரு ரசிகர் கமென்ட் செய்துள்ளார்.

    English summary
    Kamalhaasan apologizes for spelling mistake in his poetry. In this case, Netizens asks kamal, "Then why you doesn't asks apology for spelling mistake tweets?".
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X