»   »  கமல் வில்லனாக நடிக்கும் உத்தம வில்லன்! - ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்

கமல் வில்லனாக நடிக்கும் உத்தம வில்லன்! - ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: விஸ்வரூபம் 2 படத்துக்குப் பிறகு கமல் நடிக்கும் படத்துக்கு உத்தம வில்லன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கமல் வில்லனாக நடிக்கிறார்.

லிங்குசாமி தயாரிக்கும் இந்தப் படத்தில் கமல் வில்லனாக நடித்தாலும், நல்ல வில்லனாகத்தான் வருகிறாராம்.

ஆரம்பத்தில் இந்தப் படத்தை கமலே இயக்குவதாக இருந்தது. ஆனால் பின்னர் அந்த வாய்ப்பை தன் நண்பரான ரமேஷ் அர்விந்துக்கு தந்துவிட்டார். இதை கமல் அதிகாரப்பூர்வமாக அறிவித்தும்விட்டார்.

Kamal as Villain in Uthama Villain

கமல் படத்தை இயக்குவது குறித்து ரமேஷ் அரவிந்த் கூறுகையில், "கமல் நடிக்கும் படத்தை இயக்குவது மகிழ்ச்சியாகவும் பயமாகவும் இருக்கிறது. ஏற்கனவே கமலை வைத்து கன்னடத்தில் 'சதிலீலாவதி' படத்தை ரீமேக் செய்து இயக்கினேன்.

தற்போது லிங்குசாமி தயாரிப்பில் கமலை வைத்து இயக்குகிறேன். மெகா பட்ஜெட் படமாக தயாராகிறது. இப்படத்துக்கு 'உத்தம வில்லன்' என பெயர் வைத்துள்ளோம். படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

நானும் கமலும் பலதடவை சந்தித்து பேசி இதன் கதையை தயார் செய்துள்ளோம். காமெடி, பொழுதுபோக்கு அம்சங்கள், ஆக்ஷன் அனைத்தும் படத்தில் இருக்கும்.

கமல் இதுவரை நடிக்காத பாத்திரம் என எதுவும் இல்லை. ஆனால் இதில் அவர் நடிப்பது ரசிகர்களை ரொம்ப கவரும் வேடமாக இருக்கும்," என்றார்.

English summary
Kamal is playing a Villain role in Ramesh Arvind directed Uthama Villain.
Please Wait while comments are loading...