ராஜுவை சோதிக்க பயன்படுத்தப்பட்டதா கேப்டன்சி டாஸ்க்...அம்பலப்படுத்திய கமல்

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் 21 ம் நாளான இன்று, இந்த வாரம் வெளியேற போவது யார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக இருந்தனர். சனிக்கிழமை எபிசோடை போல் நேரடியாக, யார் காப்பாற்றப்படுகிறார்கள் என்பதை சொல்வார் என எதிர்பார்த்தனர்.

இந்த வாரம் நாமினேட் செய்யப்பட்ட 9 பேரில் தாமரை, இசைவாணி, அக்ஷரா, பாவனி ஆகிய நான்கு பேரும் காப்பாற்றப்பட்டு விட்டதாக கமல் நேற்று கூறினார். மீதமுள்ள ஐந்து பேரில் யாரெல்லாம் இன்று காப்பாற்றப்படுவார்கள், வெளியேற போகும் அந்த ஒருவர் யார் என்பதை தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வமாக உள்ளனர்.

 சிபியை பாராட்டிய கமல்

சிபியை பாராட்டிய கமல்

ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக இந்த வாரம் நடைபெற்ற கேப்டன்சி டாஸ்க் பற்றி பேச்சை ஆரம்பித்தார் கமல். சிபியின் கேப்டன்சி டாஸ்க்கை பாராட்டிய கமல், மற்றவர்களும் அதை ஒப்புக் கொண்ட விதமாக கைதட்டி ஆமோதித்தனர். இந்த வாரம் சிறப்பாக செயல்பட்டதாக அவர் தெரிவித்தார்.

கேப்டன்சி டாஸ்க் எப்படி

கேப்டன்சி டாஸ்க் எப்படி

உடனடியாக சட்டென மாற்றி, கேப்டன்சி டாஸ்க் நடைபெற்ற போது மாலையை மாற்றியதற்கு ஏதாவது காரணம் உண்டா. ராஜுவிடம் தான் அதிக மாலைகள் இருந்தது. ஒருவேளை ராஜுவை தலைவர் ஆக விடாமல் தடுத்து, நாமினேஷனுக்கு அனுப்பி, அவருக்கு மக்களிடம் எப்படி செல்வாக்கு இருக்கிறது என்பதை சோதிக்க தான் செய்தீர்களா என கேட்டார் கமல்.

நான்கு முறை மாற்றினேன்

நான்கு முறை மாற்றினேன்

அப்போது பதிலளித்த நிரூப், நான்கு முறை மாலையை மாற்றினேன். ராஜு தலைவராக வேண்டும் என நினைத்தேன். ஆனால் திடீரென மற்றவர்கள் அனைவரும் சிபிக்கு மாலை போட துவங்கினர். அதனால் வேறு வழியில்லாமல் நானும் சிபிக்கு மாலையை போட்டேன் என்றார்.

குழம்பிய ரசிகர்கள்

குழம்பிய ரசிகர்கள்

கேப்டன்சி டாஸ்க் நடைபெற்ற போது ராஜு கழுத்தில் இருந்த மாலையை பலரும் மாற்றி, சிபிக்கும் பாவனிக்கும் போட்டனர். பிறகு திடீரென சிபி கழுத்தில் அதிக மாலைகளை போட்டனர். எதற்காக இப்படி செய்கிறார்கள் என புரியாமல் ரசிகர்கள் குழம்பி போய் இருந்தனர்.

காரணத்தை விளக்கிய கமல்

காரணத்தை விளக்கிய கமல்

ராஜு நாமினேஷனில் இல்லை என்பதால் அவரை நாமினேட் செய்வதற்காக அவரை கேப்டன் ஆக விடாமல் தடுத்தததாக கமல் கூறியதும் ரசிகர்கள் பலர், ஓ...இதற்குள் இப்படி ஒரு அர்த்தம் உள்ளதா. இதற்காக தான் மாலையை மாற்றி சிபி கழுத்தில் போட்டார்களா என கேட்க துவங்கி விட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X