»   »  'கமலால் ரஜினி இடத்திற்கு வரமுடியாது' கமல்ஹாசனை சீண்டிய ராம் கோபால் வர்மா

'கமலால் ரஜினி இடத்திற்கு வரமுடியாது' கமல்ஹாசனை சீண்டிய ராம் கோபால் வர்மா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: 'கமலால், ரஜினி இடத்தைப் பிடிக்க முடியாது' எனக்கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் இயக்குநர் ராம் கோபால் வர்மா.

இதுநாள்வரை சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராஜமௌலி, பிரபாஸ், அல்லு அர்ஜுன் என டோலிவுட் ஹீரோக்களை சீண்டி வந்த ராம் கோபால் வர்மாவின் கவனம் தற்போது ரஜினி, கமலின் மீது திரும்பியுள்ளது.

Kamal Can't Catch Rajini Place says Ram Gopal Varma

முன்னதாக பவன் கல்யாண் ரசிகர்களை சமாதானம் செய்வதற்காக ரஜினியை விட, பவன் கல்யாண் 5 மடங்கு சிறந்தவர் என ராம் கோபால் வர்மா கூறியிருந்தார். இதற்கு ரஜினி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் கடுமையான கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

தொடர்ந்து இவரெல்லாம் எப்படி சூப்பர் ஸ்டாராக இருக்கிறார்? என்று மீண்டும் ரஜினியைக் கிண்டல் செய்து ஒட்டுமொத்த ரஜினி ரசிகர்களின் கண்டனத்திற்கும் உள்ளானார்.

இந்நிலையில் ராம் கோபால் வர்மாவின் கவனம் தற்போது கமல் மீது திரும்பியுள்ளது. ரஜினியைப் பாராட்டுவதாக நினைத்து 'கமலால், ரஜினி இடத்தைப் பிடிக்க முடியாது' என கமலை கிண்டல் செய்திருக்கிறார்.

ராம் கோபால் வர்மாவின் இந்தக் கருத்துக்கு கமல் ரசிகர்கள் தற்போது பதிலடி கொடுத்து வருகின்றனர்.

English summary
Director Ram Gopal Varma says 'Kamal Can't Catch Rajini's Place'.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil