»   »  கமலுக்கு கால் சீக்கிரம் சரியாகணும்.. ரயில்வே ஸ்டேசனுக்கு ‘வீல் சேர்’ வாங்கிக் கொடுத்த ரசிகர்கள்

கமலுக்கு கால் சீக்கிரம் சரியாகணும்.. ரயில்வே ஸ்டேசனுக்கு ‘வீல் சேர்’ வாங்கிக் கொடுத்த ரசிகர்கள்

Posted By:
Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி: நடிகர் கமலின் கால் முறிவு சீக்கிரம் குணமாகி அவர் மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற வித்தியாசமான வேண்டுதலுடன், கிருஷ்ணகிரி கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினர் கிருஷ்ணகிரி ரயில் நிலையத்திற்கு ஒரு சக்கர நாற்காலியை அன்பளிப்பாக அளித்துள்ளனர்.

தற்போது சபாஷ் நாயுடு படத்தை இயக்கி, நடித்து வருகிறார் கமல். இப்படத்தில் அவரது இரண்டு மகள்களும் அவருடன் இணைந்து பணிபுரிந்து வருகின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிந்து அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய கமல், எதிர்பாராத விதமாக ஆழ்வார்பேட்டை இல்ல மாடிப்படிகளில் தவறி விழுந்தார்.

எலும்பு முறிவு...

எலும்பு முறிவு...

இதனால், அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கமலுக்கு அறுவைச் சிகிச்சையும் நடைபெற்றது.

ஒத்தி வைப்பு...

ஒத்தி வைப்பு...

அதனைத் தொடர்ந்து தற்போது தனது இல்லத்தில் அவர் ஓய்வில் இருக்கிறார். ஒரு மாதம் டாக்டர்கள் ஓய்விலிருக்க வலியுறுத்தியதால், இம்மாதம் தொடங்கப்பட வேண்டிய சபாஷ் நாயுடு படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு செப்டம்பருக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பிரார்த்தனை...

பிரார்த்தனை...

இந்நிலையில், கமலின் கால் விரைவில் குணமாக வேண்டும் என அவரது ரசிகர்கள் தீவிர பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் கிருஷ்ணகிரி கமல்ஹாசன் நற்பணி இயக்கத்தினர் வித்தியாசமாக வேண்டுதல் செய்துள்ளனர்.

சக்கர நாற்காலி...

சக்கர நாற்காலி...

அதாவது கமல் விரைவில் குணமாக வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் அவர்கள், கிருஷ்ணகிரி ரயில் நிலையத்திற்கு ஒரு சக்கர நாற்காலியை அன்பளிப்பாக அளித்துள்ளனர். இது ரயில் நிலையத்திற்கு வரும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்பது அவர்களது கருத்து.

English summary
Members of the Kamal Narpani Iyakkam, Krishnagiri have donated a wheel chair for the Krishnagiri Railway station.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil